Mani Ratnam: நாயகன் முதல் ராவணன் வரை: சினிமாவின் எல்லைகளை மாற்றியமைத்த மணிரத்னத்தின் திரைப்படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mani Ratnam: நாயகன் முதல் ராவணன் வரை: சினிமாவின் எல்லைகளை மாற்றியமைத்த மணிரத்னத்தின் திரைப்படங்கள்

Mani Ratnam: நாயகன் முதல் ராவணன் வரை: சினிமாவின் எல்லைகளை மாற்றியமைத்த மணிரத்னத்தின் திரைப்படங்கள்

Marimuthu M HT Tamil Published Jun 02, 2024 01:26 PM IST
Marimuthu M HT Tamil
Published Jun 02, 2024 01:26 PM IST

Mani Ratnam: இயக்குநர் மணிரத்னத்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சாதி ஏற்றத்தாழ்வு முதல் பயங்கரவாதம் வரை அனைத்தையும் தன் திரைப்படங்கள் மூலம் மணி ரத்னம் சிறப்பாக கையாண்டுள்ளார். சினிமாவின் எல்லைகளை மாற்றியமைத்த மணிரத்னத்தின் திரைப்படங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

Mani Ratnam: நாயகன் முதல் ராவணன் வரை: சினிமாவின் எல்லைகளை மாற்றியமைத்த மணிரத்னத்தின் திரைப்படங்கள்
Mani Ratnam: நாயகன் முதல் ராவணன் வரை: சினிமாவின் எல்லைகளை மாற்றியமைத்த மணிரத்னத்தின் திரைப்படங்கள்

மணிரத்னம் 1983ஆம் ஆண்டில், அனில் கபூருடன் ’’பல்லவி அனு பல்லவி’’ என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து, பெரும்பாலான திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொடத் துணியாத கதைகளில் படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையில் படங்கள் பிரமிக்க வைத்தன. சினிமாவின் எல்லைகளைத் தாண்டி வந்த மணி ரத்னம் இயக்கிய ஆறு படங்களைப் பாருங்கள்.

நாயகன் (1987):

மும்பை நிழல் உலக தாதா வரதராஜன் முதலியார் மற்றும் ’தி காட்பாதர்’ என்ற அமெரிக்க திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் திரைப்படம் ’நாயகன்’, மணிரத்னத்தின் திறமையை உலகை உட்கார வைத்து கவனிக்க வைத்த படம். இந்த படத்தில் கமல்ஹாசன், தனது தந்தையின் கொலைக்கு பழிவாங்கி, பின் பயமுறுத்தும் கேங்ஸ்டராக மாறும் வேலு என்கிற சக்திவேல் நாயக்கராக நடிக்கிறார். வழக்கமான பாடல் மற்றும் நடன வணிக சினிமாக்களில் இருந்து, இந்தப் படம் வெகு தொலைவில் இருந்தது மட்டுமல்லாமல், அதன் முக்கிய கதாபாத்திரத்தை தார்மீக ரீதியாக மதிப்பிட மறுத்தது. பல திரைப்பட தயாரிப்பாளர்களையும் அதைப் பின்பற்ற ஊக்குவித்தது.

அஞ்சலி (1990):

அஞ்சலி திரைப்படத்தை மிகச் சிறப்பாக எடுத்திருந்தார், இயக்குநர் மணிரத்னம். இது 1991-ல் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படம் பரிந்துரையைப் பெறவில்லை என்றாலும், சிக்கலான விஷயங்களை மரியாதையுடனும் பொழுதுபோக்குடனும் கையாளும் படங்களுக்கு ஒரு அளவுகோலாக இருக்கிறது. இறக்கும் தருவாயில் இருக்கும் மனநலம் குன்றிய குழந்தையான அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் ஷாமிலி நடித்திருந்தார். அவளது பெற்றோர் (ரகுவரன், ரேவதி) தங்கள் மற்ற குழந்தைகளை (தருண், ஸ்ருதி) கவனிக்கும் போது, அஞ்சலி இறப்பதற்கு முன்பு அவளுக்கு தகுதியான அன்பை வழங்க போராடுகிறார்கள். அஞ்சலி ஒரு கடினமான கதையை மட்டும் கையாளவில்லை. அது ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மன்னிப்பு பற்றியும் பேசியது.

ரோஜா (1992):

காஷ்மீரில் புதிதாக திருமணமான தம்பதிகளின் தேனிலவைக் காட்டும் இந்த ரொமான்டிக் த்ரில்லர் படத்தில் அரவிந்த் சாமி மற்றும் மது ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால், விரைவில், ஒரு இரகசிய நடவடிக்கையின்போது கணவர் பயங்கரவாதிகளால் கடத்தப்படுகிறார். ஒரு கிராமத்தைச் சேர்ந்த ரோஜா என்ற இளம் பெண், இராணுவத்திடமும் அரசியல்வாதிகளிடமும் உதவி கோருகிறாள். இந்த படம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் பற்றிய தலைப்புகளை பேசியது. ஒரு காதல் கதையில் அன்றைய இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலையும் கையாள்வது தனித்துவமானது.

தில் சே (1998):

காஷ்மீர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம், ரோஜா மற்றும் கலவரத்தின் போது மும்பையில் எடுக்கப்பட்ட திரைப்படம், பம்பாய் (1995) போலவே, ’தில் சே’ அசாமில் கிளர்ச்சியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி நிர்வாகியான அமர்காந்த் வர்மாவாக ஷாருக் கான் நடித்திருந்தார். அவர் ஒரு பயங்கரவாதியும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் உறுப்பினருமான மொய்னாவை காதலிக்கிறார். இந்தப் படம் அதன் நான்லீனியர் கதைசொல்லலுக்காக கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், அன்பின் ஏழு நிழல்களை (ஈர்ப்பு, மோகம், காதல், பயபக்தி, வழிபாடு, ஆவேசம் மற்றும் மரணம்) கவித்துவமாக எடுத்துக்கொண்டது. அதே நேரத்தில் இந்தியாவின் அரசியல் சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

கன்னத்தில் முத்தமிட்டால் (2002)

மணிரத்னத்தின் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு அண்டர்ரேட்டட் ரத்தினங்களில் ஒன்று. சுஜாதாவின் அமுதாவும் அவனும் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் உள்நாட்டுப் போரின் போது, இலங்கைத் தமிழர்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்திரா என்ற புனைப்பெயரால் அறியப்படும் திருச்செல்வன் (மாதவன்) என்ற எழுத்தாளர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவதைக் காட்டி தடைகளை உடைத்தெறிகிறது. கீர்த்தனா அவர்களின் வளர்ப்பு குழந்தையான அமுதாவாக நடித்திருந்தார். அவர் தனது உயிரியல் தாயை (நந்திதா தாஸ்) கண்டுபிடிப்பதற்கான பயணத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். யாரும் கையாளத்தயங்கிய கதையம்சம் கொண்ட திரைப்படம் இது. 

ராவணன் (2010):

ராவணன் (இந்தியில் அபிஷேக் பச்சனுடன் ராவணன் என்ற பெயரில் வெளியிடப்பட்டது) ராமாயணத்தின் மறுபதிப்பாகும். எஸ்.பி. தேவ் பிரகாஷ் சுப்பிரமணியத்தின் (பிருத்விராஜ் சுகுமாரன்) மனைவி ராகினி சுப்பிரமணியத்தை (ஐஸ்வர்யா ராய்) வீரையா (விக்ரம்) கடத்துகிறார். வீரையாவை உள்ளூர் மக்கள் ஹீரோவாக போற்றினாலும், போலீசார் அவரை நக்சலைட்டாகவே நடத்துகிறார்கள். வீரையாவின் சகோதரியான வெண்ணிலாவாக பிரியாமணி நடித்திருப்பார். அவர் காவல்துறையினரால் தாக்கப்படுகிறார். இது படத்தின் நிகழ்வுகளைத் தூண்டுகிறது. ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் கதைக்கருவை வைத்து, சாதி ஏற்றத்தாழ்வுகள் தவிர்த்து காட்சி ரீதியாக அழகாக இருந்ததாக, இப்படம் பேசப்பட்டது.