Rashmika Mandanna: ஓமனில் பர்த்டேவை வைப் செய்யும் ராஷ்மிகா.. போட்டோக்களுக்கு ஃபயர் விடும் ரசிகர்கள்..
Rashmika Mandanna: நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா தனது பிறந்தநாளை ஓமனில் நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார்.

Rashmika Mandanna: கன்னட படமான கிரிக் பார்ட்டியில் ஆரம்பித்து, டோலிவுட், கோலிவுட் எல்லாம் ரவுண்ட் அடித்து பாலிவுட்டில் பறந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இன்து (ஏப்ரல் 5) தனது 29 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
படப்பிடிப்பில் இருந்து ஓய்வு
தனது நடிப்பு, அழகால் மனதை கொள்ளை கொண்ட ரஷ்மிகா, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஓமனுக்கு சென்றுள்ளார். அவரது நெருங்கிய நண்பர்களும் ஓமனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். பல படப்பிடிப்புகளின் சுறுசுறுப்பாக ஈடிபட்டிருந்த ராஷ்மிகா, அவற்றிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு ஓமனுக்கு சென்றுள்ளார். மத்திய கிழக்கு நாட்டில் பிறந்தநாள் விழாவை சந்தோஷமாகவும், சாகசமாகவும் கொண்டாடி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
பிஸியான நடிகை
சிகந்தர் தவிர, ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடித்த படங்கள் அனிமல், புஷ்பா 2 தி ரூல், சாவா என அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. பாலிவுட் மற்றும் தென்னிந்தியாவில் பல படங்கள் இவரது கையில் உள்ளன. தற்போது இந்தியாவின் மிகவும் பிஸியான நடிகை என்று சொன்னால் தவறில்லை. அந்த அளவுக்கு இவர் இரவு பகல் பாராமல் நடிப்பில் பிஸியாக உள்ளார்.
விஜய் தேவரகொண்டா எங்கே?
ராஷ்மிகா மந்தனா யாருடன் ஓமானுக்கு சென்றுள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இவர் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்கிறார் என்ற சர்ச்சை நீண்ட காலமாக உள்ளது. விஜய்யுடன் ஓமானுக்கு சென்றுள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படங்களுக்கு "விஜய் தேவரகொண்டா எங்கே?" என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
போட்டோ போட்டு வைப் செய்யும் ராஷ்மிகா
ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஓமனுக்கு சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதோடு அழகான இடத்தில் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். "நல்ல உணவு, மகிழ்ச்சியான வயிறு, கோபமான ஜுனைத் ஷேக் மற்றும் சாகர் (என் பயிற்சியாளர்). சூரியன், மணல் மற்றும் சிரிப்பின் நாடு. அருமை!" என்று அவர் இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் எழுதியுள்ளார்.
இந்த பதிவுக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளனர். பலர் 'ஹாப்பி பர்த்டே' என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் 'விஜய் தேவரகொண்டா எங்கே?' என்று கேட்டுள்ளனர். சிலர் 'புகைப்படங்களை எடுப்பது விஜய் தேவரகொண்டா' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஷ்மிகா மந்தனா
கர்நாடகாவைச் சேர்ந்த ரஷ்மிகா மந்தனா பல மொழி படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை. ஃபோர்ப்ஸ் இந்தியாவின் சக்திவாய்ந்த நட்சத்திரங்களின் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடத்தில் உள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா இந்தியாவின் பிரபலமான நடிகை. இவர் நான்கு சைமா விருதுகள் மற்றும் ஒரு பிலிம்ஃபேர் சவுத் விருது பெற்றுள்ளார்.
சினிமா வாழ்க்கை
2016 ஆம் ஆண்டு கன்னட படமான 'கிரிக் பார்ட்டி' மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் 'சலோ' படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. 'கீதா கோவிந்தம்' படத்திற்காக பிலிம்ஃபேர் விமர்சகர் விருது பெற்றார். 'தேவதாஸ்', 'சாரிலேரு நீகேவரு', 'ரொமாண்டிக்ஸ் பீஷ்மா' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் முதன்முதலில் 'சுல்தான்' படத்தில் நடித்தார். 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் நடித்த பிறகு இவரது புகழ் அதிகரித்தது. 2022 ஆம் ஆண்டு 'சீதா ராமம்' படத்தில் நடித்தார். 'அனிமல்' சாவா படத்தின் மூலம் பாலிவுட்டிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
