கொத்தாக தூக்கிய ‘பொன்னியின் செல்வன்’.. தேடி வந்த 4 தேசிய விருதுகள்.. வரிசை கட்டிய தமிழர்கள் -கெத்து காட்டிய மணிரத்னம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கொத்தாக தூக்கிய ‘பொன்னியின் செல்வன்’.. தேடி வந்த 4 தேசிய விருதுகள்.. வரிசை கட்டிய தமிழர்கள் -கெத்து காட்டிய மணிரத்னம்!

கொத்தாக தூக்கிய ‘பொன்னியின் செல்வன்’.. தேடி வந்த 4 தேசிய விருதுகள்.. வரிசை கட்டிய தமிழர்கள் -கெத்து காட்டிய மணிரத்னம்!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 08, 2024 06:57 PM IST

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன

கொத்தாக தூக்கிய ‘பொன்னியின் செல்வன்’.. தேடி வந்த 4 தேசிய விருதுகள்.. வரிசை கட்டிய தமிழர்கள் - பட்டியல் உள்ளே!
கொத்தாக தூக்கிய ‘பொன்னியின் செல்வன்’.. தேடி வந்த 4 தேசிய விருதுகள்.. வரிசை கட்டிய தமிழர்கள் - பட்டியல் உள்ளே!

70 வது தேசிய திரைப்பட விருது

கடந்த ஆண்டு புஷ்பா, கங்குபாய் ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றன. இந்த நிலையில், 70 ஆவது தேசிய திரைப்பட விருது கடந்த ஆக. 16 அறிவிக்கப்பட்டது. அதில், 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த விருதுகள் இன்றைய தினம் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு டெல்லியில் நடைபெற்று வருகிறது. 

பொன்னியின் செல்வன்

கடந்த 2022 ஆம் ஆண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் ஐஸ்வர்யாராய், விக்ரம், கார்த்தி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, சோபிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதன் படி, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிஅமைப்பு என 4 பிரிவுகளில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த விருதுகள் இன்று கலைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன் படி, சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் இயக்குநர்மணிரத்னம் பெற்றுக்கொண்டார். அதே போல, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி இசைக்கான விருது பொன்னியின் செல்வன் பாகம் 1 - ல் இசையமைப்பாளராக பணியாற்றிய ஏ. ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இது அவர் வாங்கும் 7 வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த ஒலி அமைப்பிற்கான விருது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒலி அமைப்பாளராக பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

தமிழில் சிறந்த நடிகைக்கான விருது தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்த நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார். அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பெருமளவு கொண்டாடப்பட்டது.

சாய் பல்லவி விருது இல்லையா? 

முன்னதாக, கார்கி படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவிக்கு விருது கிடைக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் கோபமடைந்த பின்னர், நித்யா மேனன் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் தனது வெற்றியை நியாயப்படுத்தி பேசி இருந்தார்.

இதுதொடர்பாக நடிகை நித்யா மேனன் அளித்த நேர்காணலில், விருது அறிவிப்பு குறித்து முதலில் தனக்குத் தெரியாது என்றும், தன்னை வாழ்த்தி மக்களிடமிருந்து அழைப்புகள் வரத் தொடங்கியபோது தான், தான் ஆச்சரியப்பட்டதாகவும் நித்யா கூறினார்.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா கதாபாத்திரம் விருது பெறும் கதாபாத்திரம் அல்ல என்று சுட்டிக்காட்டி சிலர் விமர்சிப்பது குறித்து, நித்யா கூறுகையில், "எனக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்த படம் திருச்சிற்றம்பலம் என்பதில் நான் திருப்தி அடைகிறேன். விஷயம் என்னவென்றால், நான் எப்போதும் ஒவ்வொரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகும்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தரும் படங்களைச் செய்ய விரும்புகிறேன். அதைப் பார்க்கும்போது மற்றவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன்.

ஒரு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சிப்பதை விட, மிகவும் சுயநலமான வழியில் மற்றொரு நபரை புன்னகைக்க அல்லது மகிழ்ச்சியாக வைப்பதில் தான் நடிப்பதை நான் மிகுந்த அளவில் நம்புகிறேன்.

இந்த ஆண்டு நடுவர் குழுவில் சிறப்பு திரைப்பட ஜூரியின் தலைவராக ராகுல் ரவைல் உள்ளார். நான்-ஃபீச்சர் ஃபிலிம் ஜூரியின் தலைவர், நிலா மதாப் பாண்டா இருக்கிறார் மற்றும் சினிமா ஜூரி பற்றிய சிறந்த எழுத்தாளரின் தலைவராக கங்காதர் முதலியார் இருக்கிறார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.