தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hardik Pandya - Natasa Divorce: நண்பருடன் அவுட்டிங்! பாண்ட்யா உடனான விவாகரத்து வதந்தி! நடாஷா என்ன சொன்னார் தெரியுமா?

Hardik Pandya - Natasa Divorce: நண்பருடன் அவுட்டிங்! பாண்ட்யா உடனான விவாகரத்து வதந்தி! நடாஷா என்ன சொன்னார் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 25, 2024 08:55 PM IST

Hardik Pandya - Natasa Divorce Rumour: நண்பருடன் அவுட்டிங் வந்திருந்தார் மாடலும், நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக். அவரிடம் கணவர் ஹர்திக் பாண்ட்யாவை விவாகரத்து செய்வதாக உலா வரும் வதந்தி குறித்து கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் சென்றுள்ளார்.

பாண்ட்யா உடனான விவாகரத்து வதந்தி! நடாஷா என்ன சொன்னார் தெரியுமா?
பாண்ட்யா உடனான விவாகரத்து வதந்தி! நடாஷா என்ன சொன்னார் தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது இந்த தம்பதியினருக்கு 3 வயதில் அகஸ்தியா பாண்ட்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து பாண்ட்யா - நடாஷா ஆகியோர் விவாகரத்து செய்ய இருப்பதாக கடந்த இரு நாள்களாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

ஆண் நண்பருடன் நடாஷா அவுட்டிங்

பாண்ட்யா - நடாஷா விவாகரத்து குறித்த வதந்த காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக ஆண் நண்பருடன் அவுட்டிங் வந்த நாடாஷாவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் எந்த பதிலும் கூறாமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

மும்பையில் உள்ள பிரபல காபி ஷாப்பில், நடாஷாவின் ஆண் நண்பர் என்று கிசுகிசுக்கப்படும் அலெக்சாண்டர் அலெக்ஸ் இலிக் என்பவரும் உடன் இருந்தார். அவர்களை புகைப்படம், விடியோ எடுத்து கிளிக்கி தள்ளிய பாப்பராஸிகள் நடாஷாவிடம், விவாகரத்து தொடர்பாக கேள்விகளை கேட்டு துளைத்த போதிலும் சிரித்தவாறே தாங்க்யூ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

பாண்ட்யா - நடாஷா விவாகரத்து வதந்தி

பாண்ட்யா என்கிற தனது பெயரின் பிற்பகுதியை நடாஷா தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய பிறகு இவர்களின் வதந்தி குறித்து தகவல் பரவியது. அத்துடன் சமீப காலமாக இந்த ஜோடி தங்களது புகைப்படங்கள் எதுவும் பகிரவில்லை எனவும், ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய எந்த போட்டியிலும் நடாஷா வரவில்லை.

அதேபோல் மார்ச் 4ஆம் தேதி நடாஷாவின் பிறந்தநாளில், ஹர்திக் எந்த வாழ்த்து பதிவு பகிரவில்லை. அத்துடன் ஹர்திக்குடன் இருக்கும் புகைப்படங்களை நடாஷா இன்ஸ்டாவில் நீக்கியிருப்பதாகவும், அவரது குழந்தை அகஸ்தியா, ஹர்திக் ஆகியோர் இருக்கும் குடும்ப புகைப்படத்தை மட்டும் வைத்திருப்பதாகவும் இந்த தம்பதிகளின் விவகாரத்து குறித்து தகவலை வெளியிட்ட பிரபல ஊடகத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வாய்திறக்காத ஹர்திக்

இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் மோசமான ஆட்டத்துக்கு நடாஷாவும் தான் காரணம் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நடாஷா பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரியில், டிராபிக் குறியீடுகள் இடம்பிடித்திருப்பதுடன், " யாரோ ஒருவர் தெருவில் நிற்க போகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா இதுவரை வாய்திறக்காமல் இருப்பதோடு, எந்தெவாரு கருத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்காமல் உள்ளார். அத்துடன் இந்த தம்பதிகள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

ஹர்திக் பாண்டா வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டராகவும், துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்