Nassar Brother: ‘குழந்தையை விட்டுச் சென்ற மனைவி.. அம்மாவும் நான் தான்.. அப்பாவும் நான் தான்’ நாசர் தம்பி பேட்டி!
Nassar Brother: ‘மகன் பிறந்த பிறகு அவர் இன்னும் அதிகமாக எனக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தார். நான் இங்கேயே இருந்ததினால், எனக்கு பெரிதாக வருமானம் இல்லை. இந்த நிலையில் நான் அவரிடம் நான் பிரான்சுக்கு சென்று சம்பாதித்து உங்களுக்கு அனுப்புகிறேன் என்று சொன்னேன்.’ - நாசர் தம்பி!
Nassar Brother: நாசரின் சகோதரர் ஜவஹர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இவர் அவரது அண்ணன் நாசர் தங்களுக்கு உதவுவதில்லை; வறுமையில் கஷ்டப்படுகிறோம் என்ற ரீதியில் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பரீட்சையமானார். அதன் பின்னர் மீடியாக்களுக்கு பேட்டிக்கொடுக்க ஆரம்பித்த அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை அதில் பகிர்ந்து வந்தார். அதனைத்தொடர்ந்து படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் இவர் அண்மையில் ஆதன் தமிழ் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்தப் பேட்டியில் ஜவஹர் தன்னுடைய தோல்வியடைந்த கல்யாண வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
நீ கல்யாணம் செய்து கொள்
இது குறித்து அவர் பேசும் போது, ‘நான் பிரான்சிற்க்கு சென்று நன்றாக சம்பாதித்தேன். இந்த நிலையில்தான் என்னுடைய அம்மா, வயதான காலத்தில் உனக்கு நிச்சயம் ஒரு துணை இருக்க வேண்டும். அதனால் நீ கல்யாணம் செய்து கொள் என்றார். இதையடுத்து நான் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.
பெண் ஐடித்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர், நான் வசதியானவன் என்றும் நாசரின் தம்பி என்பதற்காகவும் என்னை கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணமான 15 நாட்களிலேயே அவர் கர்ப்பம் தரித்து விட்டார். அவருக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்றாலும், அவரது பெற்றோர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் ஒத்துக்கொண்டார்.
தொடர் டார்ச்சர்
கல்யாணம் முடிந்த சில காலமாகவே அவர் எனக்கு பிரச்சினை கொடுத்து வந்தார். இதற்கிடையே என்னுடைய மகன் பிறந்தான். மகன் பிறந்த பிறகு அவர் இன்னும் அதிகமாக எனக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தார். நான் இங்கேயே இருந்ததினால், எனக்கு பெரிதாக வருமானம் இல்லை. இந்த நிலையில் நான் அவரிடம் நான் பிரான்சுக்கு சென்று சம்பாதித்து உங்களுக்கு அனுப்புகிறேன் என்று சொன்னேன்.
அப்போது அவனுக்கு பல் கூட வளரவில்லை.
அதற்குள் அவர் பெரிய விவாதமே செய்தார். நான் அங்கு சென்ற உடனே, இவர் குழந்தையை விட்டுச் சென்று விட்டார். இதனையடுத்து நான் 15 நாட்களில் பிரான்சில் இருந்து திரும்பி வந்து விட்டேன். அப்போது அவனுக்கு பல் கூட வளரவில்லை. நடக்கவும் இல்லை. என்னுடைய குழந்தையின் தலை முன்பு சரி வராமல் இருந்தது. அதற்கு காரணம் அவர்கள் குழந்தைக்கு சரியான முறையில் அழுத்தம் கொடுத்து குளிப்பாட்டவில்லை. அவன் அப்போது 8 மாத குழந்தை.
எனக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவன் மூளை வளர்ச்சி இல்லாதவன். அவனை போன்று தான் இவனும் இருக்கிறான் என்று சொல்லி, என்னிடம் பிரச்சினை செய்தார். இந்த நிலையில் நான் பிரான்சுக்கு சென்றேன். அந்த சமயத்தில் அவர் குழந்தையை இங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார். அன்றிலிருந்து இப்போது வரை அவனை நான்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்போது வரை நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை; என்னுடைய மகனுக்கு அம்மாவும் நான்தான்; அப்பாவும் நான்தான். அவனுக்காக தான் தற்போது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்.’ என்று அதில் (ஆதன் தமிழ்) அவர் பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்