"இன்னும் 6 மாசத்துல என் மகனுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணுவேன்" குண்டைத் தூக்கிப் போட்ட நெப்போலியன்
பல விமர்சனங்களுக்கு மத்தியில் நடிகர் நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இன்னும் 6 மாதத்தில் மகன் தனுஷிற்கு மீண்டும் மற்றொரு திருமணம் செய்து வைக்க உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் நெப்போலியன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் தனுஷிற்கு பல்வேறு விமர்சனங்களை மீறி திருமணம் செய்து வைத்தார், நெப்போலியன் தனது மகனிற்காக எடுத்த பல முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், திருமணம் செய்து வைக்க முயன்றபோது மட்டும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார்.
பணம் இருந்தால் எதையும் செய்வீர்களா?
பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? பணத்தை வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கலாமா என பல்வேறு எதிர்ப்பு கருத்துகள் வெளியாகின. பலரும் மிகவும் அருவறுக்கத்தக்க கமெண்டுகளையும் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு நடிகர் நெப்போலியன் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில், தனது மகன் திருமணம் குறித்தும், அவர் தன் வாழ்வில் இழந்தவை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
சிறந்த தந்தை பட்டம்
என்னை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் சிறந்த தந்தை எனக் கூறுகின்றனர். அதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் என் பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை நான் செய்கிறேன். இந்த திருமணம் குறித்து நிறைய எதிர்மறை கருத்துகள் வருகிறது. என் பையனால் எதுவும் முடியாது எனக் கூறுகின்றனர். எனக்கு தெரியும் என் பையனுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி.
18 வயதில் என் மகன் இறந்துவிடுவான்
என் பையன் தனுஷிற்கு 4 வயது இருக்கும் போது தான் இப்படி ஒரு அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு தெரியவந்தது. பல டாக்டர்களிடம் விசாரித்தபோது, இவரால் 10 வயது வரை தான் நடக்க முடியும். 18 வயது வரை தான் உயிருடனே இருப்பார் என்றெல்லாம் சொன்னார்கள். இதைக் கேட்டு கேட்டு நானும் என் மனைவியும் பயங்கரமாக அழுதோம். பின் நாங்களே எங்களை சமாதானம் செய்துகொண்டோம். ஆனால், டாக்டர்கள் சொன்னது போலவே தனுஷ் 10 வயதில் வீல் சேர் உதவியை தேடியதும் நாங்கள் மிகவும் பயந்தோம்.
உலகத்தை படித்தவன் தனுஷ்
தனுஷ் உலகத்தை மிகவும் படித்து வைத்துள்ளார். கல்யாண சமயத்தில் கூட ஜப்பானுக்கு அழைத்து சென்றது மட்டும் தான் நான். மற்றபடி அங்குள்ள அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டது தனுஷ் தான். எனக்கு 2 பேரும் மகன்கள் தான். மகள் இல்லாத குறையைப் போக்க இப்போது மருமகளை எடுத்துள்ளோம்.
என் மகனுக்கு எல்லாமுமாக இருப்பார்
எங்கள் வீட்டில் பெண் பிள்ளை இல்லை. இனி நீ தான் எங்கள் வீட்டின் மகள் எனக் கூறிதான் அவரை அழைத்து வந்தோம். தனுஷை எல்லா விதத்திலும் நீ தான் நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனைவியாக, தாயாக, சகோதரியாக, தோழியாக நீ இருந்து என் மகனை பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினோம். அவை அத்தனைக்கும் என் மருமகள் சம்மதம் சொன்னார் என்றார்.
எந்த சட்டமும் தடுக்கவில்லை
அமெரிக்காவில் கல்யாணம் பண்ண முடியாததால், இங்கிருந்து ஓடிப்போய் ஜப்பானில் கல்யாணம் செய்கிறார்கள் என பலரும் விமர்சிக்கிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து என் மகனுக்கு திருமணம் செய்து வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. எந்த நாட்டு சட்டமும் என்னை ஒன்றும் தடுக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள சட்டத்திற்கு ஏற்றபடி, நாங்கள் அங்கு சென்று அங்கு மீண்டும் சட்டப்படி திருமணம் செய்வோம்.
6 மாதத்திற்கு பின் மீண்டும் திருமணம்
இந்து கலாச்சாரப்படி, ஒரு ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் ஒன்றாக இருப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கல்யாணம் ஆகாமல் எப்படி சுற்றுகிறார்கள் என பேசுவார்கள். அதனால் தான் இவர்கள் இருவருக்கும் முறையாக திருமணம் செய்து வைத்தோம். திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் ஜப்பானில் 6 மாதம் இருப்பர். இதையடுத்து, அமெரிக்காவில் சென்று அங்கு ஒருமுறை திருமணம் செய்து, வெகு விமர்சையாக என் மருமகளை அறிமுகப்படுத்துவேன் எனக் கூறினார்.
என் அம்மா நான் 18 வயதாக இருக்கும் போதே கேன்சரில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன் பின் என் வளர்ச்சிகள் அனைத்தையும் என் அப்பா கூட இருந்து பார்த்தார் என தான் தாயை எவ்வளவு இழந்து தவிக்கிறேன் எனக் கூறியிருப்பார்.
டாபிக்ஸ்