மாற்றுத்திறனாளி மகன்.. அமெரிக்காவில் கோடிக்கணக்கில் சொத்து.. திருச்சி குமரேசன் கோடீஸ்வரர் நெப்போலியனாக மாறியது எப்படி?
திருச்சி குமரேசன் துரைசாமி எப்படி நெப்போலியனாக உருமாற்றம் அடைந்தார் என்பதை பார்க்கலாம்.

மாற்றுத்திறனாளி மகன்.. அமெரிக்காவில் கோடிக்கணக்கில் சொத்து.. திருச்சி குமரேசன் கோடீஸ்வரர் நெப்போலியனாக மாறியது எப்படி?
திருச்சி குமரேசன் துரைசாமி எப்படி நெப்போலியனாக மாறினார் என்பது குறித்து நெப்போலியன் பேசி இருக்கிறார்.
இது குறித்து மிஸ்டர் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கும் அவர், “ என்னுடைய வீட்டில் மொத்தம் ஆறு பேர். மூத்தவர் அக்கா அதன் பின்னர் அண்ணன், அதன் பின்னர் இரண்டு அக்காக்கள். அதன் பின்னர் நான்; அதன் பின்னர் என்னுடைய தம்பி.
நான் என்னுடைய வீட்டில் ஐந்தாவது பிள்ளை. என்னுடைய அப்பா வைத்த பெயர் குமரேசன். சிறு வயதில் இருந்தே கொஞ்சம் துணிச்சலான ஆள். கல்லூரி படிப்பை முடித்தேன். அதன் பின்னர் ரயில்வே துறையில் வேலை பார்த்தேன்.