Tamil News  /  Entertainment  /  Namitha Career Was Spoiled By Glamour

Namitha: கவர்ச்சியால் வந்த தொல்லை.. காணாமல் போன நமீதா

Aarthi V HT Tamil
Jan 05, 2024 07:15 AM IST

நமீதாவை பற்றி தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி அளித்தார்.

நமீதா
நமீதா

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழில் அதிக படங்களில் நடித்தார். குஜராத்தின் சூரத்தில் பிறந்து வளர்ந்த நமீதா, மாடலிங்கில் தனது இருப்பை வெளிப்படுத்திய பிறகு திரையுலகில் நுழைந்தார்.

2001 முதல் 2008 வரை நமீதாவின் கேரியரின் பொற்காலமாக இருந்தது. நமீதா இன்று சினிமா துறையில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். நமீதாவை பற்றி தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு Aramnaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், “ நமீதா பெரிய கோடீஸ்வர பெண் இல்லை. அவர் மக்களுடன் இருக்க விரும்புகிஆர் . அஜீத் - நயன்தாரா நடித்த பில்லா படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் குறைந்ததால் நமீதா வருத்தப்பட்டார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருந்தது. பில்லா பெரிய ஹிட் ஆனது.

அழகிய தமிழ் மகனா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நமீதாவுக்கு நெகட்டிவ் ரோல் கிடைத்தது. நமீதாவுக்கு சினிமா உலகில் கிளாமர் ஹீரோயின் என்ற பிம்பம் இருந்தது. நமீதாவும் தனக்கு முக்கியமான வேடங்கள் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டார்.

ஒரு கட்டத்தில் அவர் திரையுலகில் இருந்து ஒதுங்கியதற்கு காரணம் இருக்கிறது. அவர்களின் பெயரில் வீடியோக்கள் வைரலானது. அவர் அரசியல் கட்சியில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் திருமணம் செய்து கொண்டார்.

நமீதா இன்று மீண்டும் லைம்லைட்டுக்கு வர முயற்சிக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் நமீதாவின் இமேஜ் பாதிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக நமீதா நுழைந்தார். நிகழ்ச்சியில் ஓவியாவுடன் ஏற்பட்ட பிரச்னைகளுக்காக நமீதா விமர்சிக்கப்பட்டார். நமீதாவுக்கு 2017ல் திருமணம் நடைபெற்றது. நமிதா தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை மணந்தார். இருவருக்கும் 2022ல் இரட்டை குழந்தைகள் பிறந்தன “ என்றார்.

நன்றி: Aramnaadu

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.