Nakul wife sruti: ‘செக்ஸ் ஒன்னும் கெட்ட வார்த்தை கிடையாது.. வளர்ப்புதான் சரியில்லன்னா..’ - நகுல் மனைவி ப்ளார்!
பாலியல் வன்முறையை பொருத்தவரை அது சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி, அது அதற்குள்தான் அடங்கும். அது அந்த மனிதரை முழுவதுமாக மாற்றி விடும்.

பிரபல நடிகையான தேவயாணியின் சகோதரர்தான் நகுல். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நன்றாக பாடும் திறமை பல ஹிட் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
இவர் தன்னுடன் படித்த ஸ்ருதியை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஸ்ருதி சினி உலகம் சேனலுக்கு பாலியல் கல்வியின் அவசியத்தை பற்றி பேசினார். அந்த பேட்டி இங்கே
இது குறித்து அவர் பேசும் போது, “ பாலியல் வன்முறையை பொருத்தவரை அது சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி, அது அதற்குள்தான் அடங்கும். அது அந்த மனிதரை முழுவதுமாக மாற்றி விடும். அவர்களின் மூளையின் எண்ண அலைகளையும் தடம் மாற்றும். அதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
பாலியல் வன்முறை என்ற உடனேயே அது உடல் ரீதியான வன்முறை மட்டும் கிடையாது, அதில் வார்த்தை ரீதியான வன்முறை, மனரீதியாக துன்புறுத்துவது உள்ளிட்டவையும் அடங்கும்.
ஆம், சில பேர் கையேந்தி அடிக்க மாட்டார்கள் ஆனால் வார்த்தைகளிலேயே சாவடித்து விடுவார்கள். இதை நான் வளர்ப்பு சரியில்லை என்று சொல்வேன். அவர்கள் வளர்ந்த விதத்தினால்தான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு மனரீதியான கவுன்சிலிங் கண்டிப்பாக தேவை.
பாலியல் கல்வி தேவைப்படும். பாலியல் கல்வி என்ற உடன், பலரும் அதை எப்படி செய்வது என்று அங்கு சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அது மட்டும் அங்கு சொல்லிக்கொடுப்பது கிடையாது. அதை எப்படி பாதுகாப்பாக செய்வது, எது நல்ல தொடுதல், எது கெட்ட தொடுதல் உள்ளிட்டவை பற்றியும் நாம் அதில் கற்றுக் கொள்ள முடியும். செக்ஸ் என்பது தவறான வார்த்தை கிடையாது. வயதை பொறுத்து, அவர்களுக்கு ஏற்றபடி அதை பற்றி நாம் குழந்தைகளிடம் பேசலாம்” என்று பேசினார்.

டாபிக்ஸ்