Nagarjuna: எனது தந்தையின் வாழ்க்கை உத்வேகம்.. என் அப்பாவின் வெற்றிக்குப் பின் இருந்த அம்மா.. எமோஷனலாக பேசிய நாகார்ஜூனா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nagarjuna: எனது தந்தையின் வாழ்க்கை உத்வேகம்.. என் அப்பாவின் வெற்றிக்குப் பின் இருந்த அம்மா.. எமோஷனலாக பேசிய நாகார்ஜூனா

Nagarjuna: எனது தந்தையின் வாழ்க்கை உத்வேகம்.. என் அப்பாவின் வெற்றிக்குப் பின் இருந்த அம்மா.. எமோஷனலாக பேசிய நாகார்ஜூனா

Marimuthu M HT Tamil
Jan 17, 2025 11:00 PM IST

Nagarjuna: எனது தந்தையின் வாழ்க்கை உத்வேகம்.. என் அப்பாவின் வெற்றிக்குப் பின் இருந்த அம்மா.. எமோஷனலாக பேசிய நாகார்ஜூனா

Nagarjuna: எனது தந்தையின் வாழ்க்கை உத்வேகம்.. என் அப்பாவின் வெற்றிக்குப் பின் இருந்த அம்மா.. எமோஷனலாக பேசிய நாகார்ஜூனா
Nagarjuna: எனது தந்தையின் வாழ்க்கை உத்வேகம்.. என் அப்பாவின் வெற்றிக்குப் பின் இருந்த அம்மா.. எமோஷனலாக பேசிய நாகார்ஜூனா

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போல, தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராகத் திகழ்ந்தவர், அக்கினேனி நாகேஸ்வர ராவ். 

டோலிவுட்டில் எவர்கிரீன் ஹீரோவாக பெயர் பெற்றவர். அவர் பிரபல நடிகராகத் திகழ்ந்தபோது, ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவினை நிறுவினார். 

இந்நிலையில் சமீபத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் அன்னபூர்ணா ஸ்டுடியோவை நிறுவி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில் அவரது மகனும், டோலிவுட் கிங் எனவும் அழைக்கப்படும் நடிகர் நாகார்ஜுனா சமீபத்தில் யூடியூப்பில் தங்களது குடும்பச்சொத்தான அன்னபூர்ணா ஸ்டுடியோ பற்றி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். நான்கு நிமிடங்கள், 15 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் நாகார்ஜுனா பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக நாகார்ஜூனா பேசியதாவது,"சாலைகள் இல்லாத நாட்களில் என் தந்தை எப்படி இங்கு வந்து இவ்வளவு பெரிய அன்னபூர்ணா ஸ்டுடியோவை அமைத்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால், எனக்கு ஒரு விஷயம் தெரியும். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் பல தொழில்நுட்பக் கலைஞர்கள், புதிய கலைஞர்கள் மற்றும் புதிய இயக்குநர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. எனது தந்தை நாகேஸ்வர ராவ் பலருக்கு உத்வேகம் அளிக்கிறார்" என்று நடிகரும் நாகேஸ்வர ராவ்வின் மகனுமான நாகார்ஜுனா பெருமிதம் பொங்கக் கூறினார். 

என் அம்மாவும் அப்பாவும் இருப்பதாக உணர்கிறேன்: நாகார்ஜூனா

அதேபோல், "அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தனது 50ஆவது ஆண்டைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று என் தந்தை நம்பினார். அவரது வெற்றிக்கு பின்னால் என் அம்மா இருப்பதாக அவர் நம்புகிறார். அதனால்தான் இந்த ஸ்டுடியோவுக்கு அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் என்று என் அம்மாவின் பெயர் வந்தது. நான் அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு வரும்போதெல்லாம், என் அம்மாவும் அப்பாவும் இங்கே இருப்பதாக உணர்கிறேன். இங்குள்ள ஒவ்வொரு இடமும் அவர்களுக்கு பிடித்த இடம்" என்று நடிகர் நாகார்ஜுனா கூறியிருக்கிறார். 

அம்மா மற்றும் அப்பா சங்கராந்தி பண்டிகையின்போது வந்து உணவு அருந்துவார்கள்: நாகார்ஜூனா

மேலும், "நாங்கள் அன்னபூர்ணா ஊழியர்களை ஒரு குடும்பமாக கருதுகிறோம். ஸ்டுடியோ இன்று செழிப்பாக இருக்கிறது என்றால் அதற்கு அன்னபூர்ணா குடும்பம் தான் காரணம். அவர்கள் அன்னபூர்ணா ஸ்டுடியோஸின் படைவீரர்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். 

50 ஆண்டுகளுக்கு முன்பு சங்கராந்தி(பொங்கல்) பண்டிகைக்காக அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் திறக்கப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு சங்கராந்தி விழாவின்போதும் அம்மா மற்றும் அப்பா ஆகியோர் இங்கு வந்து குடும்பத்துடன் காலை உணவை சாப்பிடுவார்கள். அந்த பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது" என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவிக்கிறார்.

எனது தந்தையின் வாழ்க்கை உத்வேகம்: நாகார்ஜூனா

நாகார்ஜூனா பேசியதாவது, "என்னைப் பொறுத்தவரை, என் குழந்தைகளுக்கு, எனது தந்தை நாகேஸ்வர ராவ் வாழ்க்கையில் ஒரு பெரிய உத்வேகமாக இருக்கிறார். எங்கள் குடும்பம் மட்டுமல்ல, வெளியில் நிறைய பேரைச் சந்திக்கும்போது, அவர்கள் என் தந்தையைப் பற்றி மிகவும் நேர்மறையாகப் பேசுகிறார்கள். 

அவரது வாழ்க்கை ஒரு பெரிய உத்வேகம். எனது தந்தை நாகேஸ்வர ராவ் இன்னும் அவரது நற்பெயரில் வாழ்கிறார். உங்கள் அனைவருக்கும் சங்கராந்தி வாழ்த்துகள்" என்று சங்கராந்தி விழாவில் பேசினார். 

நாகார்ஜுனாவின் புதிய படம்

நடிகர் நாகார்ஜுனா தற்போது 'குபேரா’ என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் மூன்று வெவ்வேறு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.