Nagarjuna : கட்டிப்பிடித்து ‘உங்கள் தவறு அல்ல’என கூறிய நாகார்ஜுனா.. மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்து பேசிய வீடியோ வைரல்!
Nagarjuna : சமீபத்தில், மும்பை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை அவரது மெய்க்காப்பாளர் தள்ளிவிட்ட சம்பவம் குறித்து நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா படத்தின் ஹீரோயினாக நடித்து வருகிறார். சேகர் கம்மூலா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாற்று திறனாளி ரசிகர் ஒருவரை பிடித்து தள்ளி சம்பவம்
தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா படமாக குபேரா உருவாகி வருகிறது.இதையடுத்து ஏர்போர்டில் நாகார்ஜுனா நடந்து வந்துகொண்டிருந்தபோது அவரது பாடிகார்ட் மாற்று திறனாளி ரசிகர் ஒருவரை பிடித்து தள்ளி சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூலர்ஸ் அணிந்தவாறு கருப்பு நிற சட்டை அணிந்து கொண்டு பாடிகார்ட்கள் சூழ ஏர்போர்ட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார் நடிகர் நாகார்ஜுனா. அப்போது திடீரென மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், நாகார்ஜுனா அருகே செல்ல முயற்சித்துள்ளார். உடனடியாக உஷாரான பாடிகார்ட் அந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் நாகார்ஜுனாவை நெருங்க விடாமல் பிடித்து இழுத்து தள்ளியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்தின்போது நடிகர் தனுஷும், நாகார்ஜுனா பின் நடந்து வந்துகொண்டிருந்தார்.
பாடிகார்டால் ரசிகர்கள் இழுத்த தள்ளிவிட்டதபோது அங்கிருந்தவர்கள் சத்தம் எழுப்ப நாகார்ஜுனா கவனிக்காதது போல் நடந்து சென்றார். பின்னாடி நடந்து வந்த தனுஷ் அந்த சம்பவத்தை பார்த்து சற்றே சிறிது பதட்டமாகி பின் நடையை தொடர்ந்தார்.
நாகார்ஜுனா மன்னிப்பு
பின்னர் இந்த சம்பவத்தின் விடியோ மனிதாபிமானம் எங்கு சென்றது என்ற கேப்ஷனில் சமூக பகிரப்பட்டது. இது நாகார்ஜுனா கவனத்துக்கு சென்ற நிலையில், "இந்த விடியோ என் கவனத்துக்கு வந்தது... இப்படி நடந்திருக்கக் கூடாது!! நான் அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் (கூப்பிய கைகளுடன் எமோஜியை பகிர்ந்து) எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நாகார்ஜுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பின்னர், அவர் விமான நிலையத்தில் ரசிகரை சந்தித்து, அவரை கட்டிப்பிடித்து சம்பவம் குறித்து அவரிடம் பேசினார்.
நாகார்ஜுனா ரசிகரை சந்திக்கிறார்
ஒரு பாப்பராசி புகைப்படக் கலைஞர் பகிர்ந்த வீடியோவில், நாகார்ஜுனா மும்பை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் கிளிக்குகளுக்கு போஸ் கொடுப்பதைக் காணலாம். அவர் ஒரு ரசிகருடன் கிளிக் செய்வதற்கு போஸ் கொடுத்தபோது, புகைப்படக்காரர்கள் அவரது புகைப்படக்காரர் தள்ளிவிட்ட நபர் இவர்தான் என்று சுட்டிக்காட்டினர், இது அவரது சொந்த தவறு அல்ல என்பதை வலியுறுத்தினர். மற்ற ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு, நாகார்ஜுனா மீண்டும் அந்த ரசிகருடன் உரையாடினார். அவரைக் கட்டிப்பிடித்து, "இது உங்கள் தவறு அல்ல, தும்ஹாரா கல்தி நஹி ஹைன்" என்று உறுதியளித்துவிட்டு உள்ளே சென்றார்.
தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோருடன் சேகர் கம்முலாவின் குபேராவில் நாகார்ஜுனா படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படக்குழு சமீபத்தில் மும்பையில் ஒரு ஷெட்யூலை படமாக்கியது. குபேரா இரு மொழி படமாக இருந்தாலும் தெலுங்கில் தனுஷ் அறிமுகமாகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://www.facebook.com/HTTamilNews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்