நாக சைதன்யா -சோபிதா திருமணம்.. சமந்தா போட்ட இன்ஸ்டா ஸ்டோரி.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!
தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமந்தா போட்ட இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அக்கினேனி நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் நேற்று (டிசம்பர் 4) இரவு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. திருமண தம்பதியனரின் முதல் புகைப்படம் வெளியான நிலையில் புதுமணத் தம்பதிகளுக்கு சமூக வலைத் தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவரவில்லை
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நேற்று அவர்கள் மிகச் சில விருந்தினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ஆடம்பரமான விலையில் வாங்கியுள்ளது. எனவே, திருமண மண்டபத்திலிருந்து அதிக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவரவில்லை.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பலர் இருந்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் ராஜமௌலி மற்றும் சில கதாநாயகிகளும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
