சோபிதாவை நான் இப்படி தான் பேச சொல்வேன்.. ஏன் தெரியுமா? நாக சைதன்யா பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சோபிதாவை நான் இப்படி தான் பேச சொல்வேன்.. ஏன் தெரியுமா? நாக சைதன்யா பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்!

சோபிதாவை நான் இப்படி தான் பேச சொல்வேன்.. ஏன் தெரியுமா? நாக சைதன்யா பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்!

Divya Sekar HT Tamil
Dec 17, 2024 11:09 AM IST

நாக சைதன்யா சோபிதா குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை கூறினார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சோபிதாவிடம் தன்னிடம் தெலுங்கில் பேச சொல்வேன் என்றார்.

சோபிதாவை நான் இப்படி தான் பேச சொல்வேன்.. ஏன் தெரியுமா? நாக சைதன்யா பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்!
சோபிதாவை நான் இப்படி தான் பேச சொல்வேன்.. ஏன் தெரியுமா? நாக சைதன்யா பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்!

நாக சைதன்யா ஹைதராபாத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். சுமார் 20 ஆண்டுகளாக அவர் அங்கு இருந்தார். அவரது தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், அவர் அங்கு தமிழ் பேசி வந்தார். பள்ளி, கல்லூரி படிப்பு அனைத்தும் அங்கேயே இருந்ததால் அது அவர் தெலுங்கு பேசுவது பாதித்தது. இப்போதும் சரியான தெலுங்கு பேச முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், சைதன்யா தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது தெலுங்கு மொழியை மேம்படுத்த சோபிதாவிடம் தெலுங்கில் பேசுமாறு கூறுவேன் என்று கூறினார்.

சீக்கிரம் அவர்களுடன் நெருங்கி விடுவேன்

மேலும் அவர் பேசுகையில் "தொழில்துறையில் தினசரி அடிப்படையில் வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களை நாங்கள் சந்திக்கிறோம். ஆனால் தெலுங்கில் யாரவது பேசினால் சீக்கிரம் அவர்களுடன் நெருங்கி விடுவேன். அதனால்தான் என்னிடம் தெலுங்கில் பேசச் சொல்கிறேன். இது எனக்கு நிம்மதியைத் தரும்" என்கிறார் சைதன்யா.

"பொதுவாக நடிகர்களிடம் பேசும்போது சினிமா பற்றியோ அல்லது வேறு எந்த தயாரிப்பைப் பற்றியோ பேசுவோம். அப்படி இல்லாமல்  ஒரு நபரைப் பற்றியோ, சாதரண விஷயத்தை பற்றியோ பேசினால் அது என்னை ஈர்க்கிறது" என்று சைதன்யா கூறினார்.

நாக சைதன்யா மற்றும் சோபிதா

நாக சைதன்யா மற்றும் சோபிதா 2022 முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்த இந்த ஜோடி, டிசம்பர் 4 ஆம் தேதி அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் திருமணம் நடைப்பெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வைரலாகின.  சில நெட்டிசன்கள் நாக சைதன்யாவின் கால்களைத் தொட்டதற்காக சோபிதாவை ட்ரோல் செய்தனர்.

நாக சைதன்யா கடந்த 2021-ம் ஆண்டு சமந்தாவை பிரிந்தார். ஒரு வருடம் தனிமையில் இருந்த பிறகு, அவர் சோபிதாவை காதலித்தார். தற்போது அவர் தண்டேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பான்-இந்தியா படமாகும். இதில் சாய் பல்லவியும் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளது. மறுபுறம் பெண் சோபிதா தெலுங்கை விட பாலிவுட்டில் பிசியாக இருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.