Naangu Suvargal: வசூல் தோல்வி .. பாலச்சந்தர் கலரில் இயக்கிய முதல் படம் ‘நான்கு சுவர்கள்’..53 ஆண்டுகள் நிறைவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naangu Suvargal: வசூல் தோல்வி .. பாலச்சந்தர் கலரில் இயக்கிய முதல் படம் ‘நான்கு சுவர்கள்’..53 ஆண்டுகள் நிறைவு!

Naangu Suvargal: வசூல் தோல்வி .. பாலச்சந்தர் கலரில் இயக்கிய முதல் படம் ‘நான்கு சுவர்கள்’..53 ஆண்டுகள் நிறைவு!

Karthikeyan S HT Tamil
Feb 06, 2024 05:50 AM IST

53 years of Naangu Suvargal: பழம்பெரும் நடிகர்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் நடித்து கே.பாலச்சந்தர் இயக்கிய 'நான்கு சுவர்கள்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 53 ஆண்டுகளாகின்றன. இந்தப் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

நான்கு சுவர்கள் திரைப்படம் வெளியான நாள் இன்று!
நான்கு சுவர்கள் திரைப்படம் வெளியான நாள் இன்று!

சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு. மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.

அந்த வகையில், பழம்பெரும் நடிகர்கள் ரவிச்சந்திரனும், ஜெய்சங்கரும் இணைந்து நடித்த 'நான்கு சுவர்கள்' படம் அப்போது வெகுவாக பேசப்பட்டது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வாணிஸ்ரீ, ஆர்.எஸ்.மனோகர், நாகேஷ், சௌகார் ஜானகி, விஜய நிர்மலா, ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

'நான்கு சுவர்கள்' கதைப்படி, திருடர்களான ரவிச்சந்திரனும், ஜெய்சங்கரும் ஒரு பெரிய பங்களாவிற்கு திருடச்செல்கின்றனர். அப்போது அங்கிருக்கும் வயது முதிர்ந்த ஒருவர் அவரோகவே சாவியை எடுத்து இவர்களிடம் தருவார். அது அவர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும். அந்த முதியவர் தாங்கள் வளர்ந்த அனாதை விடுதியின் தலைவர் என்பதை இருவரும் அறிந்து கொள்வார்கள். ‘இந்த சமூகம் பிடிக்காமல்தான் நீங்க திருடனானீங்க, அதே மாதிரி இந்த சமூகம் பிடிக்காமப் போய்தான் நானும் தனியா வாழ்ந்திட்டிருக்கேன். நீங்க மனசு வச்சா திருடன், பிக்பாக்கெட்னு எல்லோரையும் திருத்த முடியும்’ என்று அறிவுரை வழங்கிவிட்டு அந்த முதியவர் இறந்து போகிறார்.

ரவிச்சந்திரனும், ஜெய்சங்கரும் அப்படியான குற்றவாளிகளை தேடிப் பிடித்து, அந்த முதியவரின் நிலத்தில் பாடுபட வைத்து, அவர்களை திருத்துவது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. புத்திசாலித்தனமான வசனங்கள், எம்.எஸ்.விஸ்வநாதனின் மயக்கும் இசை என அனைத்தும் இருந்தும் 'நான்கு சுவர்கள்' பாலச்சந்தரின் திரைபயணத்தில் தோல்வி படமாகவே அமைந்தது. 1971-ம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான இந்தப் படம், வியாபாரத்தில் சறுக்கியது. இப்படம் வெளியாகி இன்றோடு 53 ஆண்டுகளாகின்றன. நாலாபக்‍கமும் பரவாமல் நான்கு சுவர்களுக்‍குள் ஒடுங்கியது கே.பாலச்சந்தரின் 'நான்கு சுவர்கள்' திரைப்படம்.

இந்தப் படத்தையொட்டிய இன்னொரு சுவாரஸ்ய நிகழ்வு என்னவென்றால் இதே பாணியில் 1975 இல் கே.சங்கர் எம்ஜிஆரை வைத்து ‘பல்லாண்டு வாழ்க’ என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்தார். படம் ஹிட்டானது. பாலசந்தர் இரண்டு திருடர்கள் பல திருடர்களை திருத்துவது போல் கதைக்களத்தை கையாண்டிருந்தார். அதனால், ஒரு நெருடல் படத்தில் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், பல்லாண்டு வாழ்க படத்தில் எம்ஜிஆர் சிறை வார்டன். நல்லவராகவே படம் முழுவதும் காணப்பட்டார். அவர் கெட்டவர்களை திருத்துவது இயல்பாகவும், எளிதாகவும் வெகுஜனங்களை சென்றடைந்தது. அதுவே இப்படத்தின் வெற்றியாகவும் அமைந்தது. ஒரே கதை பாலசந்தருக்கு தோல்வியாகவும், எம்ஜிஆருக்கு வெற்றியாகவும் அமைந்திருந்ததற்கு இந்த இரண்டு படங்களும் ஒரு நல்ல உதாரணம் ஆகும்..

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.