Naai Sekar Returns Review: கம்பேக் கொடுத்தாரா வடிவேலு?
வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக வைகை புயல் வடிவேலு என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவர் நடித்திருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் இன்று (டிச.9) திரையரங்குகளில் வெளியானது.
கதைக் கரு
ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருந்தனர். அவர்கள் பைரவர் கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த சித்தரின்வயிற்று பசியை நிக்கினார். உடனே அவர் அந்த தம்பதிக்கு நாய் ஒன்றை கொடுக்கிறார்.
அந்த நாய் வந்த நேரத்தால் அவர்களுக்கு நாய் சேகரும் (வடிவேலு) செல்வம், புகழ் வந்தது. அவ்வீட்டில் வேலை செய்பவர் நாய்யை திருட அந்த குடும்பம் செல்வத்தை இழக்கிறது. இதனைத்தொடர்ந்து, அந்த நாயை மீண்டும் கைப்பற்ற நாய்சேகர் தனது குழுவுடன் சென்றார். அவர் நாய்யை மீட்டாறா இல்லையா என்பதே படத்தின் கதை.
வழக்கமான நடிப்பு
வடிவேலு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வருவதால், அவர் நடிப்பில் வித்தாயாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எப்போது போல் அவரின் வழக்கமான நக்கல் பேச்சு தான் இருந்தது.
வடிவேலு மட்டுமல்லாமல் இப்படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களும் செய்யும் காமெடிகள் ஒர்க்அவுட் ஆகியுள்ளது. ஷிவானி எப்போது போல் கிளமர் ரோல் தான். ஆனந்த் ராஜின் ஒன்லைன் மட்டுமே படத்தை காப்பாற்றி இருக்கிறத்
முதல் பாதி சற்று போர் அடிக்கிறது. இரண்டாம் பகுதியில் நாய்யை தேடுவது சற்று சுவாரஸ்யமாக இருக்கிறது. வடிவேலுவின் பழைய நகைச்சுவைகளை நம்பி படம் எடுத்து இருக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஜாலியாக ரசிக்க உதவுகிறது. நாய் சேகர் பணத்திற்காக விலை உயர்ந்த நாய்களை கடத்துகிறார். தாஸுக்கு பிடித்த நாய்யை அவர் கடத்தும் போது பிரச்னை தொடங்குவது நன்றாக உள்ளது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவுக்கு கை கொடுக்கவில்லை. படம் ரசிகர்களை ஏமாற்றினாலும் குழந்தைகளை கவர்ந்துள்ளது. இனி சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வடிவேலு முன்பு போல் நம்மை மகிழ்விப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
டாபிக்ஸ்