Pushpa 3 Movie Update: அல்லுவை திரும்ப புஷ்பாவாக பார்க்க 2028 வரை வெயிட் பண்ணுங்க.. அப்டேட் தந்த புரொடியூசர்
Pushpa 3 Movie Update: அல்லு அர்ஜூனை வைத்து இயக்கப்பட உள்ள புஷ்பா 3 படத்தின் படப்பிடிப்பு எப்போது குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவி சங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.

Pushpa 3 Movie Update: தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் புஷ்பா தி ரைஸ், புஷ்பா தி ரூல். தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பாளரான ரவி சங்கர் கூறியுள்ளார்.
அப்டேட் தந்த தயாரிப்பாளர்
நிதின்- ஸ்ரீலீலா நடிப்பில் உறுவாகியுள்ள ராபீன்ஹுட் திரைப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவி சங்கர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், புஷ்பா 3 படத்தின் அப்டேட்டை வழங்கியுள்ளார்.
அல்லு அர்ஜூனின் அடுத்தடுத்த படங்கள்
அப்போது, புஷ்பா 2 படத்தை முடித்துள்ள அல்லு அர்ஜூன் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி, அல்லு அர்ஜூன் தற்போது ஜவான் படத்தின் மூலம் 1000 கோடி வசூலை கொடுத்த அட்லியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் திரிவிக்ரம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த 2 படங்களில் நடிக்க அவருக்கு சுமார் 2 வருடங்களாவது தேவைப்படும்.
புஷ்பா 3 ரிலீஸ்
இதனால், இந்தப் படத்தை முடித்த உடன் அல்லு அர்ஜூன் புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமாருடன் சேர்ந்து புஷ்பா 3 தி ரேம்பேஜ் படத்தில் நடிப்பார். அதாவது 2027 ஆம் ஆண்டில் புஷ்பா 3 படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, 2028 ஆம் ஆண்டில் படத்தை திரையிடலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
புஷ்பா 2 பெருமை
புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 294 கோடி வசூலித்து, ஓபனிங் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற புதியதொரு சாதனை புரிந்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்து, இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
புஷ்பா 2 விமர்சனம்
புஷ்பா 2 திரைப்படத்தை சுகுமார், மிகப்பெரிய அளவில் ஆக்ஷன் திரைப்படமாக இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் ஏற்பட்ட எதிர்பார்ப்புகளைப் 2ம் பாகத்தில் பூர்த்தி செய்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். அத்துடன் புஷ்பா ராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் மீண்டும் அசத்தியுள்ளார். ஆக்ஷன், ஸ்டைலுடன் அசத்தியுள்ளார். இதனால் தொடக்கத்திலிருந்தே இந்தப் படம் அசத்தியது. தெலுங்கில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் மிகப்பெரிய வசூலைப் பெற்றது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
புஷ்பா 2 படக்குழு
புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ரஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தில் ஃபாஹத் பாசில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜகபதி பாபு, ராவ் ரமேஷ், ஜகதீஷ், சுனில், அனசுயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் பெரும்பாலான பகுதியை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன், ரவிசங்கர் தயாரித்துள்ளனர்.
