Mysskin Speech: ‘நான் பெரிய குடிகாரன்; இன்ஸ்டாவுல உதட்ட கடிச்சிட்டு ஆடுறா.. இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான்’- -மிஷ்கின்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mysskin Speech: ‘நான் பெரிய குடிகாரன்; இன்ஸ்டாவுல உதட்ட கடிச்சிட்டு ஆடுறா.. இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான்’- -மிஷ்கின்

Mysskin Speech: ‘நான் பெரிய குடிகாரன்; இன்ஸ்டாவுல உதட்ட கடிச்சிட்டு ஆடுறா.. இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான்’- -மிஷ்கின்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 19, 2025 08:26 AM IST

Mysskin latest Speech: இன்ஸ்டாகிராமில் என் மகள் போல இருக்கும் பெண்கள், அநாகரிகமான பாடலுக்கு, உதட்டை கடித்து நடனமாடுகிறார்கள். இதைவிட ஒரு அடிமைத்தனம் இருக்க முடியுமா என்ன? - மிஷ்கின் பேச்சு

Mysskin Speech: ‘நான் பெரிய குடிகாரன்; இன்ஸ்டாவுல உதட்ட கடிச்சிட்டு ஆடுறா.. இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான்’- -மிஷ்கின
Mysskin Speech: ‘நான் பெரிய குடிகாரன்; இன்ஸ்டாவுல உதட்ட கடிச்சிட்டு ஆடுறா.. இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான்’- -மிஷ்கின

சாராயமே காய்ச்சுவேன்

அவர் பேசும் போது, இந்த மேடையில், ‘அமீரையும், வெற்றிமாறனையும் தவிர இங்கிருக்கும் அனைவருமே குடிகாரர்கள். தமிழ் சினிமாவில் அதிகமாக குடித்தவனும் குடித்துக்கொண்டிருப்பவனும், குடித்துக் கொண்டிருக்கப்போபவனும் நானே... தமிழ்நாட்டில் ஆதியில் இருந்து குடியானது இருக்கிறது. எனக்கு அதைப் பற்றிய முழு விவரமும் நன்றாகவே தெரியும்.

சாராயமே காய்ச்சும் அளவுக்கு எனக்கு டெக்னாலஜி தெரியும். இந்த சமூகம் காரி துப்பிய எச்சிலை போலத்தான் அந்த குடியை பார்க்கிறது. கிட்டத்தட்ட நம்மிடம் ஆறு வகையான பழங்குடிகள் இருக்கிறார்கள்; அவர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில், மதுவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அந்த மதுவை அவர்கள் அவர்களின் கடவுள் வழிபாட்டின் போது குடிப்பார்கள்.

 

மிஷ்கின்
மிஷ்கின்

ஆறு வகை பழங்குடிகள்

அந்த நிகழ்வு வருடத்திற்கு 4 நாட்கள் வரும். அப்போது அவர்கள் தங்களுடைய கடவுளுக்கு மதுவையும் மாமிசத்தையும் படைத்து, அதை சாப்பிட்டு, அன்று இரவு முழுவதும் ஆடிக்களைத்து மறுநாள் மறுபடியும் வேட்டைக்கு திரும்புவார்கள். ரோமானியர்கள் குடியிலேயே வாழ்ந்தார்கள். பிரிட்டனில் எல்லா வீட்டிலும் ஒயின் இருக்கிறது. ஸ்காட்லாண்டில் விஸ்கி பிரபலமாக இருக்கிறது.

நாளும் மதுவை விரும்பி நேசித்து குடிப்பவன்தான். ஆனால், ஒரு நாள் கூட அந்த மது என்னை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது கிடையாது. நான் துணை இயக்குனராக இருக்கும் பொழுது, குடிக்க செல்வோம்; அப்பொழுது ஒரு குவாட்டர் வாங்கதான் காசு இருக்கும். அதை வாங்கும் நான், கூடவே இரண்டு கொசுவத்திகளையும் எடுத்துச் செல்வேன்.

சினிமா பேசுவோம்

காரணம், நாங்கள் குடித்துக்கொண்டே சினிமா பேச ஆரம்பித்து விடுவோம். அப்படி பேச ஆரம்பித்து விட்டால், அந்த பேச்சானது சென்று கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் நான் பாட ஆரம்பிப்பேன் எனக்கு எங்கிருந்தாவது ஒரு குவாட்டர் வந்துவிடும்.

மிஷ்கின்
மிஷ்கின்

குடிக்கு அடிமையானவர்கள் பெரும்பான்மையானோர் மிகவும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். இன்று எது தான் நம்மை அடிமையாக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் என் மகள் போல இருக்கும் பெண்கள், அநாகரிகமான பாடலுக்கு, உதட்டை கடித்து நடனமாடுகிறார்கள். இதைவிட ஒரு அடிமைத்தனம் இருக்க முடியுமா என்ன? இன்னும் கொஞ்ச நாட்களில் ஐபிஎல் வந்துவிடும்; நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அதை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருப்போம். தோனி கடைசி வரை ஓய்வு எடுக்கப் போவதே இல்லை; சச்சின் டெண்டுல்கர் தொப்பையோடு வந்து ஆட தான் போகிறார்

 

மிகப்பெரிய குடிகாரன்

நான் மிகப்பெரிய குடிகாரன்தான். ஆனால் எனக்கு அதைவிட மிகப்பெரிய போதை சினிமா. இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கிறான் குடித்துவிட்டு, அவரது பாடலை தான் சைடிஷ் போல எடுத்துக்கொள்வேன்.மனிதர்களை அதிகமாக குடிகாரர்களாக மாற்றியதும் இளையராஜாதான். குடிப்பதை வைத்து மனிதர்களை எடை போடுவதை தவிர்க்க வேண்டும். இந்தப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது, குடிப்பவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும்’ என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.