குடிக்கலாமான்னு கேட்டான்.. இத விட நல்ல நேரம்;பாலா அழுது நான் பார்த்ததே கிடையாது; ஆனா அன்னைக்கு’ - பாலா குறித்து மிஷ்கின்
பாலா படத்தைப் பார்த்தார் அவர் படம் பார்க்கும் பொழுது நான் செல்லவில்லை; படம் பார்த்துவிட்டு அவர் என்னை போனில் அழைத்து, எங்கே இருக்கிறாய் என்று கேட்டார் - மிஷ்கின் எமோஷனல்
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார்.
இதனையடுத்து அவர் அருண்விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து இருக்கிறார். வணங்கான் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பாலாவின் 25 ஆவது வருட திரைப்பயண விழாவும் ஒன்றாகக்கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியதாவது,
பாலா அழுது நான் பார்த்ததே
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் வெளியான பொழுது, அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அந்தப் படத்தை ஓட விடவில்லை. பாலா படத்தைப் பார்த்தார் அவர் படம் பார்க்கும் பொழுது, நான் செல்லவில்லை; படம் பார்த்துவிட்டு அவர் என்னை போனில் அழைத்து, எங்கே இருக்கிறாய் என்று கேட்டார்;
நான் வந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். பாலாவை சென்று நான் பார்த்தேன்; பாலா அழுது நான் பார்த்ததே கிடையாது; ஆனால் அந்த படம் பார்த்த பின்னர் அவர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் என்னை அவரது ரூமிற்கு அழைத்துச் சென்றார்; குடிக்கலாமா என்று கேட்டார் இதைவிட குடிப்பதற்கு ஏது நல்ல நேரம் என்று நான் குடிக்கலாம் என்றேன்.
குடித்தோம்
குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர் எனக்கு படம் செய்கிறாயா என்று கேட்டார்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. சுதாரித்து மீண்டும் கேட்ட பொழுது, நான் உனக்கு படம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் தயாரிப்பாளராக மாறினார். அப்படித்தான் நான் பிசாசு திரைப்படத்தை இயக்கினேன். நான் கீழே விழுந்து கிடந்த பொழுது பாலா என் கையைப் பிடித்து தூக்கி, எனக்கு ஒரு படம் கொடுத்தான்; எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தான்.’ என்று பேசினார்.
நடிகர் விக்ரம் பாலா 25 நிகழ்ச்சிக்கு வராதது குறித்து வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசி இருக்கிறார்.
விக்ரம் சார் ஊரில் இல்லை
இது குறித்து அவர் பேசும் போது, ‘அவரை பாலா 25 நிகழ்ச்சிக்கு கூட்டி வர நாங்கள் பல கட்ட முயற்சிகளை செய்தோம். ஆம், விக்ரம் சாரை போனில் நேரடியாக தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால் கடைசிவரை, அவரை நெருங்க கூட எங்களால் முடியவில்லை. இதனையடுத்து அவரது மேனேஜரை தொடர்பு கொண்டு, அவரை நிகழ்ச்சிக்கு கொண்டு வர முயற்சி செய்தோம்.
ஆனால் அவர் விக்ரம் சார் ஊரில் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அவரை தொடர்பு கொள்ள பல முயற்சிகளை எடுத்தோம். ஆனால் அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.’ என்று பேசினார்.
டாபிக்ஸ்