Mysskin latest speech: ‘ஆண்ட்ரியாவோட நிர்வாணக்காட்சியை போஸ்டர்ல போட்டு இருந்தா..’ - மேடையில் கொதித்த மிஷ்கின்
Mysskin latest speech: நிறைய நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கூறினேன். கதையை கேட்டவுடன் அவள் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டார். நான் அதற்காக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தினேன். அந்த போட்டோ ஷூட் ஒரு பெண்ணால் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட். - மிஷ்கின்

Mysskin apology: பா.ரஞ்சித் தயாரிப்பில் சோம சுந்தரம் கதாநாயகனாக நடித்து வெளியான ‘பாட்டில் ராதா’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குநர் மிஷ்கின் வரம்பு மீறி பேசி இருந்தார். இதற்கு திரைத்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று நடந்த ‘பேட் கேர்ள்’ பட நிகழ்வில் அதற்காக அவர் மன்னிப்புக்கோரி இருக்கிறார். அதில் அவர் ‘பிசாசு 2’ திரைப்படம் முடங்கி கிடப்பதற்கான காரணம் குறித்தும் பேசினார்.
அவர் பேசும் போது, ‘கடந்த மூன்று நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும் நான்தான் இருந்தேன். என்னுடைய திரைப்படங்கள் நல்ல திரைப்படங்கள் இல்லையா..? என்னுடைய படங்களில் சமூக கருத்தை நான் முன் வைக்கவில்லையா..? என்னுடைய திரைப்படங்கள் பேரன்பு இல்லையா.. ? நான் பெரிய ஹீரோவிடம் கதைகளைச் சொல்லி பெரிய இயக்குநராக வேண்டும் என்று முயற்சி செய்யவில்லை.
கமல், ரஜினியுடன் படம் செய்யவில்லை
கமல் சாரிடம் சென்று நான் திரும்பி வந்து விட்டேன். ரஜினி சாருக்கு கதை சொல்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது; ஆனால் நான் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. மனிதர்களையும், மனித இனங்களையும், பிராணிகளையும் நேசிப்பவன் நான். ஆனால், நான் பேசியது உங்களுக்கு ஆபாசமாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள்.
பிசாசு 2 படம் முடக்கம்
பிசாசு 2 திரைப்படத்தில், என்னுடைய குழந்தை ஆண்ட்ரியாவிடம் கதை சொல்லும் பொழுது, கதையின் படி, ஒரு தாய்க்குள் ஒரு பேய் இருக்கிறது; அந்த பேய் மிகவும் விரசமாக இருக்கிறது; அதனால் நிறைய நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். கதையை கேட்டவுடன், அவள் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டார்.
நான் அதற்காக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தினேன். அந்த போட்டோ ஷூட் ஒரு பெண்ணால் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்.அந்த போட்டோ ஷூட்டிற்காக ஆண்ட்ரியா தயாராக இருந்தார். என்னுடைய உதவி இயக்குநர் ஈஸ்வரியை அதை எடுப்பதற்காக நான் நியமித்து இருந்தேன். நானும் உள்ளே இருந்தேன். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிகை; மிகச்சிறந்த ஆளுமை. அவள் என் கதை மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக நிர்வாணமாக ரூமில் இருந்து வர தயார் ஆனாள். ஆனால் நான் வீட்டிற்கு வெளியே வந்து சிகரெட் பிடித்து யோசித்துக்கொண்டு, அலுவலகத்திற்கு வந்து விட்டேன்.
எனக்கு ஆண்ட்ரியா போன் செய்து, எங்கே சென்று விட்டீர்கள் என்று கேட்டார். நான் அவளிடம் உன்னுடைய நிர்வாணத்தை என்னுடைய படத்தில் காண்பித்து நான் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொள்ளலாம். படம் நல்ல வசூலை ஈட்டலாம்; ஆனால் உன்னை போஸ்டரில் அப்படி காட்டும் பொழுது, நான் பார்த்த பார்வையிலேயே இளைஞர்கள் உன்னை பார்க்க மாட்டார்கள். அவர்கள் விரசமாகத்தான் அந்த படத்தை பார்ப்பார்கள்.
அதனால், அந்தக் காட்சி வேண்டாம் என்று சொல்லி விட்டேன். நான் போஸ்டரில் அந்த போட்டோவை வெளியிட்டு இருந்தால், அந்த படம் ரிலீஸ் ஆயிருக்கும். இரண்டரை வருடங்களாக அந்த திரைப்படம் முடங்கி கிடக்கிறது. அந்த திரைப்படத்தை பார்த்த வெற்றிமாறன் இங்கு அமர்ந்திருக்கிறார். படத்தை பார்த்த அந்த நாள் தன்னால் எதுவும் பேச முடியவில்லை; நாளை பேசுகிறேன் என்று கூறினார். நான் சினிமாவை நேசிப்பவன்; சினிமா மேடைகளையும், சார்ந்து இருப்பவர்களையும் நான் நேசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பேசினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்