Actress Shobana: 'விரதம் இருந்து செத்துட்டா.. ஆனா வடிவேலுவோட வச்சு பேசுறாங்க..' வேதனையில் ஷோபனா குடும்பம்
Actress Shobana: என் தங்கை விரதம் இருந்து இறந்துட்டா. ஆனா, அவள வடிவேலு சாராோட தொடர்பு படுத்தி என்னென்னமோ பேசிட்டாங்க என ஷோபனாவின் அக்கா வருத்தத்துடன் பேசியுள்ளார்.

Actress Shobana: சின்னத் திரை, வெள்ளித் திரை, மேடை நாடகம் என அனைத்திலும் ஜொலித்து வந்த நடிகை ஷோபனாவின் மரணத்தை பலரும் ஜோடித்து விட்டனர். என் தங்கையிந் நிலை தெரியாமல் அவளை வடிவேலு சாருடன் சேர்த்து பேசி விட்டனர் என ஷோபனாவின் அக்கா அவள் விகடனிடம் வேதனை தெரிவித்துள்ளார்.
விரதத்தால் பிரச்சனை
ஷோபா ஒரு முருக பக்தை. எப்போ பாத்தாலும் விரதம் விரதம்ன்னு இருப்பாங்க. அதுனால அவங்களுக்கு வயிறுல பிரச்சனை வர ஆரம்பிச்சிடுச்சி. சாப்பிடாம டீ மட்டும் குடிச்சி குடிச்சி பித்தமும் அதிகமாகி ரொம்ப உம்பு முடியாம போயிடுச்சி
விவேக் சார் தயங்கினாரு
ஷோபா வடிவேலு சார் கூட படம் பண்ணும் போதே விவேக் சாரோடவும் நடி்சாங்க. அப்புறம் என்ன ஆச்சின்னா, இவங்க வடிவேலுவோட நடிக்குறாங்க. அதுனால இவங்க வடிவேலுவோட ஆளுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.
விவேக் சார் என் கூட நடிக்குறதுக்கு முன்னாடி வடிவேலு சார்கிட்ட ஒருமுறை கேட்டுக்கோன்னு எல்லாம் சொன்னாங்க. அதுக்கு அப்புறம் அவங்களுக்கும் பெருசா சேர்ந்து நடிக்க வாய்ப்பு வரல.
கால்ஷீட் பிரச்சன
கடைசியில, எம்டன் மகன், சிறுத்தை படம் எல்லாம் பண்ணிட்டு இருக்கும் போது, ஷோபாக்கு கால்ஷீட் பிரச்சன வந்துடுச்சி. அதுனால பெருசா அவங்களால நடிக்க முடியாம போயிடுச்சு.ஒய்.ஜி. மகேந்திரன் சாரோட ட்ராமால அவ நடிச்சதுனால தான் இதெல்லாம் அவளால சரியா பண்ண முடியல. இருந்தாலும் அவளோட நடிப்பு திறமைய பாத்து கமய் சாரும், ரஜினி சாரும் அவளோட போட்டோ எடுத்துகிட்டாங்க. அதெல்லாம் நான் பொக்கிஷமா வச்சிருக்கேன்.
அவள பத்தி தப்பா எழுதுனாங்க
அவ ரொம்ப உடம்பு முடியாம இருந்தா. அப்போ அவள பத்தி என்னென்னவோ எழுதுனாங்க. வடிவேலு சாரோட எல்லாம் ஒன்னைா வச்சு பேசுனாங்க. ஒரு ஆர்டிஸ்ட்னா அப்படி தான் பண்ணுவாங்களா. இதெல்லாம் பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது.
என் தங்கை இறந்ததுக்கு அப்புறம் எங்கப் போனாலும் எல்லாரும் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. இது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுனால அவங்க எங்கயும் போகாம வீட்டுலயே அரஸ்ட் பண்ணி வச்ச மாதிரி இருந்தாங்க.
புரளி எல்லாம் கிளப்புனாங்க
ஷோபா இறந்ததுக்கு அப்புறம் எல்லாம் அவள பத்தி புரளி எல்லாம் கிளப்பிட்டாங்க. ஷோபா பேயா அங்க நிக்குது இங்க நிக்குதுன்னு. அப்போ அம்மாவால அத தாங்கிக்க முடியாம, அவ இருந்த வீட்ல ஒத்த ஆளா தனியா இருந்தாங்க. என்னோட வந்து இருக்க சொல்லி எவ்ளவோ கேட்டேன். ஆனா அவங்க வரல.
ரொம்ப கஷ்டப்பட்டா
ஷோபா விரதம் இருந்து அவளுக்கு குடல் எல்லாம் ரொம்ப சுருங்கி போச்சு. எதுவும் சாப்பிட முடியாம ட்ரிப்ஸ் ஏத்துற மாதிரி ஆச்சு. அப்போ கூட அவளால மாத்திரை எதுவும் எடுத்துக்க முடியல. தொண்டைல புண்ணு வந்து குரல் எல்லாம் போச்சு. சிக்கன் குனியா வந்ததுக்கு அப்புறம் அவளால நடக்கவும் முடியல. அதுலயும் அவ விரதம் இருக்கத் தான் செஞ்சா" என தன் தங்கையின் உடல்நிலை குறித்து கூறி வேதனை பட்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்