தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan Ranganathan: ‘என் மகளும் இன்னொரு பொண்ணுமா.. ச்சே.. நாக்கு அழுகிடும்..’: பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்!

Bayilvan Ranganathan: ‘என் மகளும் இன்னொரு பொண்ணுமா.. ச்சே.. நாக்கு அழுகிடும்..’: பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்!

Marimuthu M HT Tamil
May 12, 2024 02:44 PM IST

Bayilvan Ranganathan: சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், தன் மகளும் இன்னொரு பெண் குறித்தும் பொதுவெளியில் பரவிவரும் தகவலுக்கு விளக்கமளித்துள்ளார்.

Bayilvan Ranganathan: ‘என் மகளும் இன்னொரு பொண்ணுமா.. நாக்கு அழுகிடும்..’: பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்!
Bayilvan Ranganathan: ‘என் மகளும் இன்னொரு பொண்ணுமா.. நாக்கு அழுகிடும்..’: பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்!

ட்ரெண்டிங் செய்திகள்

கலைஞர் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கு எடுத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனிடம், தங்களது கடைசிப் பெண் ஒரு லெஸ்பியன் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டினார்,நடிகை ஷகிலா. அதற்கு நாக்கு அழுகிவிடும் என்றும்; தன் மகளைப் பற்றி எவ்வாறு அப்படி பேசலாம் என்றும் பேசினார், பயில்வான் ரங்கநாதன். இது சமூக வலைதளங்களில் பற்றி எரிய, அதன் தொடர்ச்சியாக குமுதம் யூட்யூப் சேனலில் அவரை அழைத்து பேட்டியெடுத்திருக்கிறார்கள்.

அதற்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பல்வேறு பதில்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. அவையாவன, ‘’ நான் முறுக்கு மீசை வைத்திருப்பது என்பது ஆண்மையின் அடையாளம். நான் நடிகைகள் பற்றி பேசுவது என்பதற்கு நேரில் பார்க்கவேண்டும் என்ற அர்த்தம் அல்ல. ஒரு பத்திரிகையாளர் செய்தியைச் சொல்வான். அதைப் படிப்பவர்கள் மற்றும் பேட்டியைப் பார்ப்பவர்கள் மூலம் மனநிலையைப் பொறுத்து அது மாறுபடும். தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கல்யாணம் நடக்கக் காரணம் செய்தியாளர்கள் எழுதியதுதான், பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினியே சொல்லியிருக்கிறார். 

என்னுடையது பேச்சு வியாபாரம்:

நான் அவர்கள் தனியாக இருக்க விரும்புவதைத் தான் சொல்லியிருக்கிறேன். ஆதாரமில்லாமல் எந்தவொரு அவதூறும் நான் இதுவரை சொன்னதில்லை. அமலா பால் ஏன் விவாகரத்து செய்துகொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் பத்திரிகையில் வந்ததைத் தான் சொன்னேன். நான் பிழைப்புக்காக தான் இப்படி பேசுகிறேன். என்னுடையது பேச்சு வியாபாரம். நடிகைகள் செய்வது கவர்ச்சி வியாபாரம். நான் ராதிகாவை பார்த்தோ, குயிலியைப் பார்த்தோ, ஷகிலாவைப் பார்த்தோ, ரேகா நாயரை பார்த்தோ பயப்படவில்லை. 

நான் எம்.ஜி.ஆர் ரசிகன் சொன்னது ஷகிலாவுக்குப் பிடிக்கலை. அதை அசிங்கப்படுத்த இரண்டு பெண்களை வைச்சு தப்பா பேச வைச்சாங்க. 

’அவரை கவர்ச்சி நடிகை என்று சொன்னேன்':

நான் பேசினது எல்லாம் எடிட் பண்ணிட்டாங்க. குயிலி, தன்னுடைய முதல் படத்தில்,அவரைப் பற்றி தவறாக எழுதினேன் என்று எப்போதும் கடுப்பாகவே இருப்பார். ‘நிலா அது வானத்து மேலே’ பாடலில் குயிலி நடித்ததற்குப் பின், அவரை கவர்ச்சி நடிகை என்று சொன்னேன். அதனால், அவர் என்னை தவறாகப் புரிந்துகொண்டார். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட எந்தவொரு பிரச்னையும் இல்லை.

நடிகைகளை அது, இது என்று பேசுவது அவர்கள் நடத்திய விதத்தின் வெளிப்பாடு தான். கலைஞர் தொலைக்காட்சியில் நடந்தது எல்லாம் செட்டப் நாடகம். 

ஒரு வளர்ப்புப் பெண்ணை வளர்த்துட்டு போலீஸ் வரை போவது எல்லாம் ஷகிலாவின் நன்னடத்தைக்குச் சான்றா?. என்னை அவமானப்படுத்துவதற்காக, என் மகளைப் பற்றி தவறாக சொன்னார்கள். பொய்ப் பேசினால் கோபம் வரும்’’ என்று சொல்லிவிட்டு பேட்டியை நிறுத்த முயற்சிக்கிறார். 

அதன்பின் தொடர்ந்து பேசும் பயில்வான் ரங்கநாதன், ‘’ என்னைப் பற்றி மட்டும் பேசுங்க. என் மகளும் இன்னொரு பொண்ணும் லவ் பண்றதுங்கிறது பொய்யுங்க. சத்தியமான பொய்ங்க. அப்படி பேசுறவங்க நாக்கு அழுகிடும். 

திரும்ப திரும்ப நான் சொல்றேன். ஆதாரங்களுடன் தான் பேசுறேன். என் பெர்ஷனல் பற்றி மட்டும் பேசாதீங்க. நான் இணையதளத்தில் செய்தியாக வந்ததை மட்டும் தான் பேசுறேன்.(உடனே போனில் செய்தியாக வந்ததை காட்டுகிறார்). 

இதுக்காக, நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன். ஒரு பொண்ணும் பொண்ணும் பேசிக்கொண்டால் காதல்னு சொல்றது தவறு’’ என்றார். 

நன்றி: குமுதம் டிவி; நன்றி: கலைஞர் டிவி

IPL_Entry_Point

டாபிக்ஸ்