RIP Captain Vijayakanth: 'பிரபஞ்சம் முழுவதும் விரவி இருப்பார் என் கேப்டன்' சமுத்திரகனி உருக்கம்
RIP Captain: உங்களோடு பயணப்பட்ட அந்த 72 நாட்கள்.. உங்க மனசுக்கு தான் "நிறஞ்ச மனசு' என்று நான் இயக்கிய படத்துக்கு டைட்டில் வைத்தேன் கேப்டன்..

விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் தற்போது தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்பினரும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இயக்குநரும் நடிகருமான சமுத்திர கனி விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கேப்டன் நான் சமுத்திரக்கனி..
உங்களோடு பயணப்பட்ட அந்த 72 நாட்கள்.. உங்க மனசுக்கு தான் "நிறஞ்ச மனசு' என்று நான் இயக்கிய படத்துக்கு டைட்டில் வைத்தேன் கேப்டன்..
அந்த 72 நாட்கள் உங்களோடு இருந்தது ஒரு மாபெரும் சக்தியோடு இருந்த மாதிரி இருக்கு... இன்னைக்கும் பசுமையான நினைவுகளாக அது மனசுக்குள்ள இருக்கு கேப்டன்.. இன்னைக்கு நீங்க இல்லைன்னு சொல்றாங்க.. என் மனசு ரொம்ப மறக்குது.. என்னுடைய கேப்டன் இந்த பிரபஞ்சம் முழுவதும் விரவி இருப்பார்.. அவர் ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எங்களுக்குள்ளேயே இங்கு இருக்கிறீர்கள் கேப்டன். உங்களுடைய நல்லெண்ணமும் இந்த சமூகத்தில் மீது நீங்கள் வைத்திருந்த பார்வையும் எல்லாமே எனக்கு தெரியும் அதை நாங்களும் முன்னெடுக்கிறோம் கேப்டன். ரொம்ப கஷ்டமா இருக்கு.. ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் கேப்டன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்