Ilaiyaraaja: 'வீட்ல இருந்த ரேடியோவ வித்து மியூசிக் கத்துக்க வந்தேன்.. இன்னமும் கத்துக்குறேன்'- இளையராஜா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ilaiyaraaja: 'வீட்ல இருந்த ரேடியோவ வித்து மியூசிக் கத்துக்க வந்தேன்.. இன்னமும் கத்துக்குறேன்'- இளையராஜா

Ilaiyaraaja: 'வீட்ல இருந்த ரேடியோவ வித்து மியூசிக் கத்துக்க வந்தேன்.. இன்னமும் கத்துக்குறேன்'- இளையராஜா

Malavica Natarajan HT Tamil
Feb 01, 2025 04:27 PM IST

Ilaiyaraaja: இசைஞானி இளையராஜா, தனக்கு இசை மீது நாட்டம் ஏற்பட்டது எப்படி என்றும், சினிமாவிற்கு இசையமைக்க வந்த கதை குறித்தும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Ilaiyaraaja: 'வீட்ல இருந்த ரேடியோவ வித்து மியூசிக் கத்துக்க வந்தேன்.. இன்னமும் கத்துக்குறேன்'- இளையராஜா
Ilaiyaraaja: 'வீட்ல இருந்த ரேடியோவ வித்து மியூசிக் கத்துக்க வந்தேன்.. இன்னமும் கத்துக்குறேன்'- இளையராஜா

அன்னக்கிளி படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரைத்துறை பயணம் தற்போது 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், இசைஞானி இளையராஜா தனது இசைப் பயணம் குறித்து சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

'அண்ணன் பாட்ட கேட்டு வந்த ரசனை'

அந்தப் பேட்டியில், " பட்டிக்காட்டில் பிறந்தவன் நான். அங்கிருந்து இசையை கத்துக்க நினைக்குறதே பெரிய விஷயம். எங்க அண்ணன் பாடுறத கேட்டு கேட்டு வந்த ரசனை தான் இது எல்லாம். பாகவதர் பாட்ட கேட்டுட்டு அண்ணோட கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாட்டு பாடிட்டே இருந்தப்போ தான் எனக்கு இசைய கத்துக்கணும்ன்னு தோனுனது.

அந்த சமயத்துல எங்க அண்ணன் வெளிய போனதுக்கு அப்புறம் எங்க அம்மாகிட்ட பேசினேன். அம்மா அண்ணன் எங்கள கம்யூனிஸ்ட் கட்சி உண்டியல்ல போட்ட மாதிரி வச்சிருக்கான். அத கட்சி காரங்களாலும் எடுக்க முடியாது. நம்மளும் எடுக்க முடியாது. எனக்கு மியூசிக் கத்துக்கணும். நான் எங்கயாவது வெளியூர் போய் மியூசிக் கத்துக்குறேன்மான்னு சொன்னேன்.

'ரேடியோவ வித்து காசு தந்தாங்க'

உடனே எங்க அம்மா சரின்னு சொல்லி வீட்ல இருக்க ரேடியோ பெட்டிய வித்து 400 ரூபா தர்றாங்க. இந்த காச தந்துட்டு இது போதுமான்னு கேக்குறாங்க. அவங்க வீட்டு செலவுக்கு 100 ரூபாவ வச்சிட்டு மீதி 300 ரூபாவ குடுத்திருந்தா கூட நாங்க ஒன்னும் சொல்லிருக்க மாட்டோம். அவங்களும் எங்ககிட்ட கேக்கல. நாங்களும் இதபத்தி அவங்ககிட்ட கேக்கல. எங்க அம்மாவோட வார்த்தைகள் தான் என்ன வழி நடத்துச்சு. அவங்க வாழ்த்து சொல்ற மாதிரி எல்லாம் இருக்காது. எங்கயாவது போறேன்னு சொன்ன போயிட்டு வாங்கப்பான்னு சொல்லுவாங்க. அவ்வளவு தான்.

'ஒரே நாள்ல கத்துக்கிட்ட பாடம்'

நாங்க எங்க அம்மாட்ட இருந்து காசு வாங்கிட்டு சென்னை போகலாம்ன்னு கெளம்புன சமயத்துல, மதுரை போயி சில கச்சேரி எல்லாம் பண்ணிட்டு காசு சேத்து சென்னை போகலாம்ன்னு யோசிச்சோம். அப்படி நாங்க மதுரை போன ஒரே நாளுல கத்துகிட்ட பாடம் என்னென்ன இந்க உலகத்தில் உனக்கு உதவ யாரும் கிடையாது. நீயாக உழைத்து முன்னேற வேண்டுமே தவிர யாரும் உதவ மாட்டார்கள் என்பது தான்.

வழியனுப்ப வந்த கஜினி முகமது

அதுக்கு அப்புறம் அன்னைக்கு நைட்டே மெட்ராஸூக்கு பஸ் ஏறுறோம். அப்போ, அன்னக்கிளி கதாசிரியர் ஆர்.செல்வராஜ் பஸ் ஸ்டாண்டுக்கு வர்றான். எங்ககிட்ட என்னென்னு விசாரிச்சார். அப்போ மெட்ராஸ் போற கதைய சொன்னதும் போங்கடி போங்க. அங்க உங்களுக்கு இருக்குன்னு சொல்றான். அவன் கஜினி முகமது மாதிரி கொஞ்சம் கொஞ்சமா காசு சேப்பான். மெட்ராஸ் போவான். திரும்ப வருவான். அன்னைக்குன்னு பாத்து எங்கள வழி அனுப்ப வர்றான்.

'நோட்ஸ் கரெக்டா சொன்னேன்'

எனக்கும் சென்னைக்கு வந்தும் எனக்கு இசையமைக்க எல்லாம் ஆச இல்ல. மியூசிக் கத்துக்கணும், ஆனா, எனக்கு ஒருசில மாசத்துலயே சினிமாவுல வாய்ப்பு கிடைச்சது. என்னோட மாஸ்டர் கோவாவில் சிஐடி 999ன்னு ஒரு படம் . அந்தப் படத்துக்கு மியூசிக் போட சிட்சுவேசன் சொல்லிட்டு டைரக்டர் போயிட்டாரு. இப்போ கம்போஸ் பண்ணனும், மாஸ்டர் என்கிட்ட நோட்ஸ் சொல்றேன் எழுதிக்கோன்னு சொல்றாரு. நான் நீங்க 2 முறை சொல்லுங்க மனப்பாடம் ஆகிடும்ன்னு சொன்னதும் நீ அவ்ளோ பெரிய ஆளான்னு கேட்டு 10 நோட்ஸ் சொல்றாரு. அத நான் கரெக்டா சொன்னதும் அதையே மாத்தி மாத்தி சொன்னாரு.

அதையும் சரியா சொல்லிட்டேன். அதப்பாத்து ஆச்சரியப்பட்ட அவரு, நாளைக்கு ரெக்கார்டிங்ல நீ தான் நோட்ஸ் சொல்றன்னு சொல்லிட்டாரு. அப்போல இருந்து இப்போ வரைக்கும் மியூசிக்க கத்துக்க தான் வந்தேன் இன்னமும் கத்துக்கிட்டு தான் இருக்கேன்." என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.