தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Music Label Maajja Response To Santhosh Narayanan Reveals He Did Not Receive Remuneration From Label For Enjoy Enjaami

Santhosh Narayanan: ‘குற்றச்சாட்டை மறுக்கிறோம்.. நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்’ - சந்தோஷிற்கு மாஜா பதில்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 13, 2024 06:29 PM IST

எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுயாதீன கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சுயாதீன இசைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்களில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம்.

சந்தோஷ் நாராயணனுக்கு தயாரிப்பு தரப்பு பதில்!
சந்தோஷ் நாராயணனுக்கு தயாரிப்பு தரப்பு பதில்!

ட்ரெண்டிங் செய்திகள்

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்பாடல் சர்ச்சையிலும் சிக்கியது. இந்தப்பாடலில் அறிவுக்கு போதுமான கிரெடிட் கொடுக்கப்படவில்லை என்று அவர் பதிவிட, அதற்கு சந்தோஷ் நாரயணன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப்பாடல் மூலமாக தங்களுக்கு எந்த வருமானமும் வரவில்லை என்று கூறி சந்தோஷ் நாராயணன் அண்மையில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாஜா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில், “சுயாதீன இசையை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே மாஜா நிறுவனம். எங்களின் முதல் வெளியீடான 'என்ஜாய் என்ஜாமி'யின் வெற்றி எமக்கும், இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதையிட்டு, இந்த சாதனையைப் படைத்தத்தற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். துரதிரஷ்டவசமாக இந்தப் பாடலின் வெற்றிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே இருந்த சில முரண்பாடான கருத்துக்களால், இந்த வெற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுயாதீன கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சுயாதீன இசைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்களில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம். மேலும் நாங்கள் எங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் அல்லது கலைஞர்களிடமிருந்து அவர்களுக்கான வருமானங்களை நிறுத்திவைக்கும் செயல்களை செய்யவில்லை.

இருப்பினும், நாங்கள் நம்பியிருந்தது போல் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே பாடலுக்கான பங்களிப்பு பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அதுதவிர கலைஞர்களின் ஒப்பந்தக் கடமைகளின்படி, அவர்களின் நேரடி ஈடுபாடுகள் மற்றும் நேரடியாக சேகரிக்கப்பட்ட வருமானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தாலும், அதற்கான எந்த வெளிப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தச் செயற்பாடுகளால் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகாணும் முயற்சிகள் சிக்கலில் இருக்கிறது.

இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, அவர்கள் சார்பாக கணிசமான செலவுகளையும் மாஜா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் நிலை விரைவாகவும் தீர்க்கப்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுள்ளோம். சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, உரிய வழிகளில் அவற்றை நிவர்த்தியும் செய்வோம்.” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

 

 

முன்னதாக சந்தோஷ் நாராயணன் வெளியிட்டு இருந்த வீடியோவில், “எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. நான் இப்போது இந்தப்பாடல் மூலம் எவ்வளவு பணம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதை நான் இங்கு சொல்லப்போகிறேன்.

மூன்று கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப்பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் வெறும் பூஜ்ஜியம். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றிய உலகளவில் மிகவும் பிரபலமான கலைஞர்களை எங்கள் தரப்பு தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

ஆனால் எங்களுக்கு இது வரை எந்த வித வருமானமும் அந்தப்பாடலில் இருந்து கிடைக்க வில்லை. இந்த அனுபவத்தால் நான் இப்போது என்னுடைய சொந்த ஸ்டியோவை தொடங்கி இருக்கிறேன். இதில் இன்னொரு போனஸ் என்னவென்றால் என்னுடைய யூடியூப் சேனலுக்கு திருடப்பட்டு இருக்கிறது. அதில் இருந்து வரும் வருமானம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே சென்று கொண்டு இருக்கிறது.” என்று பேசி இருந்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்