Ilaiayaraaja: 'இத நான் தம்பட்டம் அடிக்க சொல்லல.. இசை தான் நான்..' பெருமையாக பேசிய இளையராஜா
Ilaiayaraaja: ஹாலிவுட்ல இப்போ ட்யூன் கம்போஸ் பண்ண ஆளே இல்லன்னு சொல்லும் போது தான் நான் புக் எழுதிட்டு இருக்கேன் என இளையராஜா கூறியுள்ளார்.

Ilaiayaraaja: இசையமைப்பாளர் இளையராஜா தான் சினிமாவிற்கு வந்த கதையும், தன்னை மெருகேற்றி வளர்த்துக் கொண்டது எப்படி என்றும் சன் நியூஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருப்பார். அந்தப் பேட்டியில், ஹாலிவுட்ல இப்போ ட்யூன் கம்போஸ் பண்ண ஆளே இல்லன்னு சொல்லும் போது தான் நான் புக் எழுதிட்டு இருக்கேன் என தன் வளர்ச்சி பற்றி பேசி இருப்பார்.
ஹாலிவுட்ல ஆள் இல்ல
அந்தப் பேட்டியில், "நான் சமீபத்துல ஒரு வீடியோ பாத்தேன். ஒரு இசை நிகழ்ச்சி நடக்க போகுது. அதுல ஹாலிவுட் சம்பந்தப்பட்டவர் பேசுறாங்க. ஹாலிவுட்ல இது ரொம்ப இருண்ட காலம். ஹாலிவுட்ல இசையை எழுதவும் கம்போஸ் செய்யவும் யாரும் இல்லைன்னு சொல்றாரு. இந்த காலத்துல இல்லன்னு சொல்றாரு. அந்த நேரத்துல தான் நான் என்னோட நோட்ஸ் எழுதிட்டு இருக்கேன்.
இசை தான் நான்
இதுக்காக என்ன உலகம் திரும்பி பாக்குதோ இல்ல பொருட்படுத்தாம போகுதோ அது எனக்கு தெரியல. இசை என்னோட தொழில் இல்ல. இசை தான் நான்.
80 வயச தாண்டி, சினிமாவுல 50 வருஷம் ஆனதுக்கு அப்புறமும் இசைய நான் என்னோட வேலையா நெனச்சிட்டு இருந்திருந்தா எனக்கு டயர்ட் ஆகிருக்குமோ என்னமோ? நான் ரெஸ்ட் எடுத்திருப்பனோ என்னவோ?
எல்லாம் இயற்கையா நடக்குது
நான் உக்காந்திருக்கேன். ஸ்ரீதர் என் பக்கத்துல இருக்காரு. ஒருத்தர் வந்து மராட்டி மொழியில 4 லைன் பாட்ட குடுத்து இதுக்கு ட்யூன் வேணும்ன்னு கேக்குறாரு. அங்க பாடுறதுக்கு ஆர்டிஸ்ட் எல்லாம் வெயிட் பண்றாங்கன்னு சொல்றாரு. நானும் அத படிச்சு பாத்துட்டு, 4 வரி எழுதிட்டு ட்யூன் போட்டேன். அதெல்லாம் அப்படியே நடந்தது.
இத நான் என்னபத்தி தம்பட்டம் அடிக்குறதுக்காக சொல்லல. இயல்பாவே இசைங்குறது என்னோட வேலையே இல்ல. மூச்சு விடுற மாதிரி. உங்ககிட்ட யாராவது வந்து நீங்க நல்லா மூச்சு விடுறீங்கன்னு சொன்னா எப்படி இருக்கும். அது மாதிரி தான். யாராவது என்கிட்ட வந்து உங்க மியூசிக் நல்லாருக்குன்னு சொன்னா இருக்கும். அதெல்லாம் இயற்கையா நடக்குற ஒன்னு " என்றார்.
கர்வம் வந்துட்டு ரிலாக்ஸ் ஆகிட்டேன்
மேலும் பேசிய அவர், நான் எங்க அண்ணனோட கச்சேரில வாசிக்கும் போது அவரு கொஞ்சம் கேப் விட்டாருன்னா நான் சினிமா பாட்டு எல்லாம் வாசிப்பேன். ஒரே கைதட்டலா வரும். அதெல்லாம் கேக்கும் போது கர்வமா இருக்கும். அப்புறம் இது தொடர்ந்துட்டே போகும் போது நான் கொஞ்சம் யோசிச்சேன். இந்த கைதட்டல் எல்லாம் ட்யூனுக்கு தான் கிடைக்குது. இந்த ட்யூன் எம்எஸ்வி போட்டது. அதுனால இது எனக்கு சேராதுன்னு தெரிஞ்சதும் தான் நான் ரொம்ப ஃபிரி ஆகி ரிலாக்ஸ் ஆனேன்.
என் ட்யூன் கொடூரமா இருக்கும்
அதுக்கு அப்புறம் தான், இந்த கைதட்டு எல்லாம் நாம எப்போ வாங்குறதுன்னு யோசிச்சு தான் மியூசிக் கம்போஸ் பண்ண ஆரம்பிச்சேன். அப்போ நான் கம்போஸ் பண்ண பாட்டு எல்லாம் ரொம்ப கொடூரமா இருக்கும். இதெல்லாம் சரியில்லன்னு எங்க அண்ணன் சொல்லுவாரு. அதுக்கப்புறம் என்ன நானே மெருகேத்திட்டு சினிமா பாட்டுக்கு நடுவுல என்னோட பாட்டோட ட்யூனும் போடுவேன். அப்போ எல்லாரும் இது என்ன பாட்டுன்னு கேப்பாங்க. அப்போ, இது இன்னும் ரிலீஸ் ஆகல. சீக்கிரம் ரிலீஸ் ஆகும்ன்னு சொல்லி சமாளிப்பேன்" என தன் வளர்ச்சி குறித்து இளையராஜா பேசி இருப்பார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்