Yuvan Shankar Raja: விஜே சித்துவால் சொந்தப் படத்தையே செஞ்சிவிட்ட யுவன்.. எப்படி இருந்த மனுஷன்..
Yuvan Shankar Raja: ஸ்வீட்ஹார்ட் படத்தின் புரொமோஷனுக்காக விஜே சித்துவின் மொட்ட மாடி பார்ட்டி நிகழ்ச்சிக்கு வந்த யுவன் சங்கர் ராஜா, தன் சொந்த படத்தையே சம்பவமாக்கி உள்ளார்.

Yuvan Shankar Raja: தமிழ் சினிமாவில் தன் இசைக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு மட்டுமல்ல, குரலுக்கும் அத்தனை ரசிகர்கள் உள்ளனர். இவர், தற்போது சினிமா தயாரிப்பில் விருப்பம் கொண்டு சில படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா தாயாரித்த படம் தான் ஸ்வீட் ஹார்ட்.
ஸ்வீட்ஹார்ட் படம்
ஸ்வீட்ஹார்ட் படம் யுவன் சங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனத்தின் 4 வது தயாரிப்பு ஆகும். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வைனீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ளார். ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க, கோபிகா ரமேஷ் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தை தயாரித்ததுடன் படத்திற்கு இசையமைத்தும் உள்ளார்.
பட புரொமோஷன்
இந்நிலையில், படம் மார்ச் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான புரொமோஷனில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்படி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர் ரியோவும் தங்கள் படத்தின் புரொமோஷனுக்காக விஜே சித்துவின் மொட்ட மாடி பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பல சம்பவங்களை செய்துள்ளனர்.
டாடா 2வின் காப்பியா?
இந்த நிகழ்ச்சியில், படத்தின் கதை பற்றி விவாதிக்கையில், படத்தின் டிரையிலரை பார்க்கும் போது ஒரு சாயலில் இது பேச்சுலர் மாதிரியான படம் எனத் தோன்றியதாக ஹர்ஷத் கான் சொன்னார். அப்போது இல்ல இல்ல, இது பார்க்கும் போது டாடா படம் மாதிரி தான் இருக்கு. இந்த படத்துலயும் ரெண்டு பேர் லவ் பண்ணுவாங்க. குழந்தை பிறக்கும். சண்ட எல்லாம் வரும் அப்போ இதுவும் டாடா படம் மாதிரி தான். அதுனால இது டாடா 2 என விஜே சித்து சொல்வார்.
இதைக் கேட்ட யுவன் சங்கர் ராஜா ஆமா இது பாக்க டாடா 2 மாதிரி தான் இருக்கு என ஒப்புக் கொள்வார். இதைப் பார்த்த ரியோ ராஜ் பதறி போய் இல்ல இல்ல இது அந்தப் படம் இல்லன்னு சொல்வார்.
ஆதலால் காதல் செய்வீர் படத்தின் காப்பியா?
பின், இந்தப் படம் இல்லன்னா, ரியோவோட ஹேர்ஸ்டைல், கதை எல்லாம் வச்சி பாக்கும் போது இது ஆதலால் காதல் செய்வீர் படம் மாதிரி இருக்கு என விஜே சித்துவும், ஹர்ஷத்தும் சொல்வார்கள். அப்போதும் யுவன் ஆமா இது ஆதலால் காதல் செய்வீர் 2 தான் என சொல்வார். அப்போது, ஒரு புரொடியூசரயே இப்படி ஏமாத்தி வச்சிருக்கீங்களே என விஜே சித்து கிண்டல் செய்ய, யுவன் ஏய் ஸ்வைனீத் என படத்தின் இயக்குநரை கிண்டலாக மிரட்டுவார்.
டிராகன் மெத்தேட்
ஏற்கனவே, டிராகன் படத்தின் புரொமோஷன் வீடியோவில் டைரக்டர் அஸ்வத் மாரிமுத்துவையே இது டான் படத்தின் 2 ஆம் பாகம் என பேசிப் பேசியே நம்ப வைத்திருப்பார்கள். அது மக்களிடையே நன்றாக ரீச் ஆன நிலையில், தற்போது ஸ்வீட்ஹார்ட் படத்திற்கும் இதே மெத்தேடை ஃபாலோ செய்கின்றனர்.
ரியோவின் பட்டம்
மேலும் இந்த வீடியோவில் ரியோ ராஜிற்கு CSR என்ற பட்டமும் கொடுத்திருப்பர். அப்படி என்றால் சார்மிங் ஸ்டார் ரியோ என விளக்கமும் அளித்தனர். யுவன் சங்கர் ராஜா YSR என அழைக்கப்படுவது போல இனி ரியோவும் CSR என மக்களிடம் அறியப்படுவார் என்றும் கூறினர்.
எப்போதும், அமைதியாக அதிகம் பேசாத யுவன் தான் பலருக்கும் பரிட்சையமான நிலையில், இந்த மொட்ட மாடி பார்ட்டி நிகழ்ச்சியில் ஜாலியாக வைப் செய்த யுவனை பலரும் பார்த்து கொண்டாடினர்.

டாபிக்ஸ்