RIP Vijay Anand : அதிர்ச்சி.. ரஜினிகாந்த் பட இசையமைப்பாளர் காலமானார். திரையுலகம் இரங்கல்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த நான் அடிமை இல்லை படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆனந்த்(71) காலமானார் .
தமிழ் சினிமாவில் 1984 ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளியான திரைப்படம், நாணயம் இல்லாத நாணயம். இந்த படத்தில் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். இந்த படத்தின் இசையமைப்பாளர், விஜய் ஆனந்த் (71). அவர் இசையில் வெளியான இந்த பட பாடல்கள் அனைத்துமே ஹிட்டானது.
ரஜினிகாந்த் நடித்த நான் அடிமை இல்லை, சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார்.
குறிப்பாக நான் அடிமை இல்லை படத்தில் இடம் பெற்ற “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்” பாடல் மூலம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் விஜய் ஆனந்த் பிரபலமானார். இவர் தமிழில் 10 தமிழ் படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார். மேலும் கன்னடத்தில் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து மாஸ் காட்டி இருக்கிறார்.
விஜய் ஆனந்த் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ( பிப். 6 ) மாலை சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
விஜய் ஆனந்த் மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் விஜய் ஆனந்த் மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியிலிருந்து கன்னடத்துக்குப் சென்று அங்கு விஷ்ணுவர்த்தன் நடித்த ஒரு படத்தில் இசையமைப்பாளர் விஜயானந்தை தமிழுக்கு அழைத்து வந்தார். 'காவலன் அவன் கோவலன்', 'ராசாத்தி வரும் நாள்', 'கயிறு' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இவர் இசையமைத்து இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்