Music Director Thaman: கொஞ்சமாவது பொறுப்பா இருங்க.. எரிச்சல் ஆகுது.. திடீரென கொதித்த தமன்
Music Director Thaman: தெலுங்கு சினிமாவில் தலை தூக்கி வரும் ரசிகர்கள் சண்டை குறித்து இசையமைப்பாளர் தமன் மிகவும் எமோஷனலாக பேசியவை தற்போது வைரலாகி வருகிறது.

Music Director Thaman: தெலுங்கு சினிமாவில் தலை தூக்கி வரும் ரசிகர்கள் சண்டை தமக்கு எரிச்சலைத் தருவதாக இசையமைப்பாளர் தமன் பேசிய வார்த்தைகள் தான் டோவிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
20 ஆண்டுக்குப் பின் இணைந்த கூட்டணி
இசையமைப்பாளர் தமன் 20 ஆண்டுகளுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் 5 கதை நாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார். அந்தப் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், பின்னாளில் மாபெரும் இசையமைப்பாளராக மாறினார். அவர், தமிழ் சினிமாவைக் காட்டிலும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அவர் இசையமைத்த அத்தனை பாட்டுகளும் ஹிட் அடிக்கும்.
இந்நிலையில், பாய்ஸ் படத்திற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த முறை இசையமைப்பாளராக கை கோர்த்துள்ளார். இது ஷங்கரின் முதல் நேரடி தமிழ் படம் ஆகும்.
தொடர் சிக்கலில் ஷங்கர்
இந்தப் படம் வெளியாகும் முன்பு இருந்தே ஷங்கர் சில பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்தார். கேம் சேஞ்சரின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்றது, படத்தின் அப்டேட் வழங்குவதில் தாமதாக்கியதால் ரசிகரின் தற்கொலை கடிதம் வெளியானது, டிரெயிலர் வெளியீட்டு விழாவிற்கு வந்த கூட்டத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தது என ஷங்கர் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டிருந்தது. இருந்தாலும் இந்தப் படத்த்தின் தயாரிப்பாளர் தெலுங்கு சினிமா சங்கத்தின் தலைவராக இருப்பதால் அதனை சமாளித்து வந்தார்.
தெலுங்கு சினிமாவை திரும்பி பார்க்க வைத்த தமன்
அத்தனை பிரச்சனைகளை மீறி, படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸ் வசூலை தெரிவித்த போதும் பிரச்சனை ஆரம்பித்தது. படக்குழுவினர் பொய்யான பாக்ஸ் ஆபிஸ் கணக்கு காட்டுகின்றனர் எனக் கூறி பல இடங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலைய்யாவின் தாக்கு மகாராஜ் படமும் வெளியானது. அந்தப் படத்திற்கும் தமன் தான் இசையமைத்திருந்தார். இ்நநிலைில், இந்தப் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமன் பேசியவை தெலுங்கு சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.
கலைஞர்களை கொல்கிறோம்
அந்த விழாவில், இன்றைய காலத்தில் ஒரு படத்தின் தயாரிப்பாளர் அவரின் பட வெற்றியைக் கூட கொண்டாட முடியாமல் இருக்கிறார். தெலுங்கு சினிமா தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது. பிற மொழி சினிமா கலைஞர்கள் கூட இங்கு வந்து வேலை செய்ய ஆசைப்படுகின்றனர். ஆனால் நாம் படங்களையும் கலைஞர்களையும் கொன்று வருகிறோம். ரசிகர்கள் அவர்களுடைய நடிகர்களை கொண்டாடட்டும். ஆனால், அதே சமயம் சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் கொஞ்சமாவது மதிக்க வேண்டும்.
வேதனை தருகிறது
சோசியல் மீடியாவில் இப்போது வரும் ட்ரோல்களும், நெகட்டிவ் விமர்சனங்களும் டேக்ஸ்களு், ட்ரெண்டிங் வார்த்தைகளும் எரிச்சலைத் தான் தருகின்றன என தன் வேதனையைத் தெரிவித்தார். இவரது பேச்சைக் கேட்ட பலரும் தமன், ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு தான் இப்படி பேசுகிறார் என கூறி வருகின்றனர்.
சிரஞ்சீவி ஆதரவு
இந்நிலையில், ராம் சரணின் தந்தையும் தெலுங்கு முன்னணி நடிகருமான சிரஞ்சீவி தமனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில், நேற்று நீங்கள் பேசிய வார்த்தைகள் மனதைத் தொட்டன. எப்பொழுதும் கேலியாகப் பேசிக் கொண்டிருந்த உங்களுக்கு இப்படியொரு வலி இருக்குமா என எனக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது. ஆனால் மனம் எவ்வளவு வருத்தப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் எதிர்வினையாற்றுகிறீர்கள் என்று தோன்றியது.
வார்த்தைகள் வாழ்க்கையை வழிநடத்தும்
சப்ஜெக்ட் படமாக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, சமூகப் பிரச்சினையாநாலும் சரி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளின் தாக்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
யாரோ சொன்னது போல், வார்த்தைகள் இலவசம் தான், வார்த்தைகள் ஊக்குவிக்கவும் செய்யும் அவை அழிவை ஏற்படுத்தவும் செய்யும். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நிதானமாக தேர்ந்தெடுங்கள்.
நாம் நேர்மறையாக இருந்தால், அந்த ஆற்றல் நம் வாழ்க்கையை நேர்மறையாக வழிநடத்தும் எனக் கூறினார். இவர்கள் இருவரின் வார்த்தைகள் தான் தற்போது தெலுங்கு சிநிமா மொத்தமும் பேச்சாக இருக்கிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்