Guntur kaaram: குண்டூர் காரம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தமன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Guntur Kaaram: குண்டூர் காரம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தமன்!

Guntur kaaram: குண்டூர் காரம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தமன்!

Aarthi V HT Tamil Published Jun 20, 2023 01:07 PM IST
Aarthi V HT Tamil
Published Jun 20, 2023 01:07 PM IST

மகேஷ் பாபு படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

குண்டூர் காரம் படத்தில் இருந்து  நீக்கப்பட்ட தமன்
குண்டூர் காரம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தமன்

இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அவர் தேதி பிரச்னை காரணமாக படத்தில் இருந்து விலகி உள்ளாராம்.

வெளியீட்டு தேதி, படத்தின் வசனம் மற்றும் இசை அமைப்பாளர் ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது இந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேறியது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

ஜூன் முதல் டிசம்பர் வரை மற்ற படங்களுக்கு பூஜா தேதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குண்டுர் காரம் படத்தை எடுத்தால் மற்ற படங்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் தான் வெளிவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டேவுடன் இசையமைப்பாளர் தமனும் வெளியேறினார். அவருக்கு பதிலாக படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ஸ்டுடியோவில் இலவசமாக மோர் கடையைத் தொடங்குகிறேன். வயிறு எரியும் அறிகுறிகளால் அவதிப்படுபவர்களை வரவேற்கிறோம் தயவு குணமடையுங்கள்

நல்ல இரவு நிறைய வேலைகள் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை “ எனக் குறிப்பிட்டு இருந்தார். இதிலிருந்து அவர் படத்தில் நக்கப்பட்டு இருக்கிறார் என்பதை உறுதி செய்வதால் போல் உள்ளது. 

படப்பிடிப்பு தொடங்க வேண்டிய குண்டுர் காரம், நடிகர்கள் தேர்வில் சிக்கலை எதிர்கொள்கிறது. இனி வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.