'சூர்யா 45 படத்தில் ஒரு ஃபேன் பாய் சம்பவம் இருக்கும்.. பிஜிஎம் மாஸாக இருக்கும்'- சாய் அபயங்கர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'சூர்யா 45 படத்தில் ஒரு ஃபேன் பாய் சம்பவம் இருக்கும்.. பிஜிஎம் மாஸாக இருக்கும்'- சாய் அபயங்கர்

'சூர்யா 45 படத்தில் ஒரு ஃபேன் பாய் சம்பவம் இருக்கும்.. பிஜிஎம் மாஸாக இருக்கும்'- சாய் அபயங்கர்

Malavica Natarajan HT Tamil
Published Jun 04, 2025 11:47 AM IST

சூர்யா 45 படத்தின் இசை மாஸாக வந்து கொண்டிருக்கிறது. இதில் நிச்சயம் ஃபேன் பாய் சம்பவம் இருக்கும் என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறியுள்ளார்.

'சூர்யா 45 படத்தில் ஒரு ஃபேன் பாய் சம்பவம் இருக்கும்.. பிஜிஎம் மாஸாக இருக்கும்'- சாய் அபயங்கர்
'சூர்யா 45 படத்தில் ஒரு ஃபேன் பாய் சம்பவம் இருக்கும்.. பிஜிஎம் மாஸாக இருக்கும்'- சாய் அபயங்கர்

சூர்யா 45 சூப்பரா போயிட்டு இருக்கு

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாய் அபயங்கர், "சூர்யா 45 படம் சூப்பரா போயிட்டு இருக்கு. எல்லாமே சூப்பரா போயிட்டு இருக்கு. நான் படம் பாக்குறதுக்கு முன்னாடியே என் மனசுல படம் பத்தி எந்த மாதிரி யோசனை வருதோ அதை எல்லாம் யோசிச்சு தனியா மியூசிக் கம்போஸ் பண்ணிடுவேன். அப்புறம் அது எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி வைப்பேன்.

ஃபேன் பாய் சம்பவம்

நான் ஒர்க் பண்றது எல்லாமே பெரிய படம்ங்குறதால கொஞ்சம் மாஸா மியூசிக் கம்போஸ் பண்ணுவேன். இப்போ சூர்யா சார் படம்ன்னு சொன்னா அவருக்கான மாஸ் எல்லாம் எப்படி இருக்கனும்ன்னும் நம்ம மனசுக்குள்ள இருக்கும். நான் சின்ன வயசுல இருந்து அவர பாத்திருக்கேன். அதனால் அந்த ஃபேன் பாய் சம்பவம் எல்லாம் கொஞ்சம் இருக்கும். அதெல்லாம் சரியா டெலிவர் பண்ணனும்.

பிஜிஎம், மியூசிக் வேல்யூ இருக்கும்

அதோட மட்டுமல்ல, படத்துக்கு தேவையான கமெர்சியல் எலிமெண்ட் எல்லாம் சேரே்ந்து இருக்கும். படத்துக்கு தேவையான மியூசிக் வேல்யூ எல்லாம் இருக்கும். சொல்லப் போனால் எனக்கு படத்துக்கான பேக் கிரவுண்ட் ஸ்கோர் பண்றது ரொம்ப பிடிக்கும். நான் ஏ.ஆர். ரஹ்மான் சாரோட வொர்க் பண்ணும் போதும் நான் பேக்கிரவுண்ட் ஸ்கோர் பண்ணிருக்கேன். அனிருத் சார், ஜிவி பிரகாஷ் சாரோட வொர்க் பண்ணும் போதும் பேக்கிரவுண்ட் ஸ்கோர் பண்ணிருக்கேன். பேக்கிரவுண்ட் ஸ்கோர் பண்றது எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு. எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு சவுண்ட் ஸ்கோர் கொடுக்கனும்ன்னு எதிர்பாக்குறோம்." என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் என்ன ஆனார்?

சூர்யா 45 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அப்படத்திலிருந்து விலகியதற்கு என்ன காரணம் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும், சூர்யா 45 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியே வில்லனாக நடிக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த சாய்?

பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகனான இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி பிறந்தவர். அடிப்படையிலேயே இசைக்கலைஞ ரான இவர், கீ போர்டு மற்றும் கிடார் கருவிகளை வாசிப்பது மட்டுமல்லாமல் நன்றாக பாடும் திறமையும் கொண்டவர். கடந்த ஜனவரி மாதம் இவரின் இசையில் வெளியான "கட்சி சேர" பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் பாடல் யூடியூப்பில் 135 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது.

மேலும் படிக்க| பேச்சுவார்த்தைக்கு தயார்.. ஆனால் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.. உறுதியாக நிற்கும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை..

அதன் பின்னர் இவரது இசையில் வெளியான " ஆச கூட" பாடலும் 100 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றது. இவரது திறமையை பார்த்த லோகேஷ் கனகராஜ் அவர் எழுதி, தயாரிக்கும் பென்ஸ் படத்தில் சாயை இசையமைப்பாளராக கமிட் செய்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க இருக்கிறார். இதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாய் தற்போது சூர்யாவின் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.