'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா புகழாரம்
மவுண்ட் பேட்டன் காலத்தில் இருந்து ஆட்சி செய்தவர்களைப் பற்றி பட்டியல் எடுத்தால் தான் மோடி செய்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார்.

'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா புகழாரம்
இசைஞானி இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியதோடு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சந்திப்பையும் நினைவு கூர்ந்தார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய இளையராஜா, தனது 80-வது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தன்னை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக பகிர்ந்துள்ளார்.
அவரால் தான் விருது
2018 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதைப் பெற்ற பிறகு தான் எப்படி உணர்ந்தேன் என்பதை இளையராஜா பகிர்ந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியுடனான தனது சுருக்கமான உரையாடலை இசைஞானி இளையராஜா நினைவு கூர்ந்தார். எங்கள் பிரதமரால் தான் எனக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது. அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார் என்றார்.