பேரன்புமிக்க ரசிக பெருமக்களே.. இசைஞானி இளையராஜாவிடம் இருந்து வந்த இனிமையான செய்தி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பேரன்புமிக்க ரசிக பெருமக்களே.. இசைஞானி இளையராஜாவிடம் இருந்து வந்த இனிமையான செய்தி..

பேரன்புமிக்க ரசிக பெருமக்களே.. இசைஞானி இளையராஜாவிடம் இருந்து வந்த இனிமையான செய்தி..

Malavica Natarajan HT Tamil
Published Jun 02, 2025 01:15 PM IST

இசைஞானி இளையராஜா தன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு ஒரு இனிமையான செய்தியை அறிவித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

பேரன்புமிக்க ரசிக பெருமக்களே.. இசைஞானி இளையராஜாவிடம் இருந்து வந்த இனிமையான செய்தி..
பேரன்புமிக்க ரசிக பெருமக்களே.. இசைஞானி இளையராஜாவிடம் இருந்து வந்த இனிமையான செய்தி..

ரசிகர்களுக்கு நன்றி

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, "பேரன்புமிக்க ரசிக பெருமக்களே.. மீடியாவைச் சேர்ந்த அன்பர்களே.. தமிழ்நாட்டில் எங்கெங்கும் நிறைந்திருக்கக் கூடிய எனது அன்பர்களே.. என் மீது மரியாதையும், பாசமும் பக்தியும் வைத்திருக்கக்கூடிய கோடனகோடி ரசிகர்களே நீங்கள் சொல்லுகின்ற பிறந்தநாள் வாழ்த்துகளை நான் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன்.

தொடர்ந்து வரும் வாழ்த்து

உங்களுக்கு நன்றி எப்படி சொல்வது என்று எனக்கு வார்த்தைகள் கிடையாது. ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லிவிடுகிறேன். தமிழக முதல்வர் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். அத்தோடு மீடியா நண்பர்களும், பிரபலங்களும், குடியரசு துணைத் தலைவரும் எனது ரசிகர்களும் எனக்கு வாழ்த்து செய்தியை அனுப்பிக் கொண்டே உள்ளீர்கள்.

மகிழ்ச்சியான அறிவிப்பு

இந்த பிறந்தநாளிலே உங்களுக்கு நான் ஒரு இனிய செய்தியை அறிவிக்க உள்ளேன். வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி, நான் லண்டனில் இசையமைத்த அந்த இசை நிகழ்ச்சியில், என்னுடன் இசையமைத்த அதே ஆர்கெஸ்ட்ரா குழுவினர், தமிழ்நாட்டிற்கு வரவுள்ளனர், அவர்களுடன் இணைந்து என்னுடைய மக்களுக்கு முன்னாள் இசைக்க போகிறேன். அதற்கு முதல்வர் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசையை நீங்கள் கேட்க வேண்டும்

என் இசையை நீங்கள் கேட்கணும். நான் மட்டும் சும்மா போய் வாசிச்சா அது எப்படி நல்லா இருக்கும். அதற்கான பயன் என்ன?. நான் வாசிச்சு பேர் எடுத்து எதுவும் இல்லை. அந்த இசையை நீங்கள் கேட்க வேண்டும். என்னுடைய மக்களுக்கு இந்த இந்த இசை எல்லாம் இருக்கிறது என நான் சொல்ல வேண்டும். அவர்களை எல்லாம் மேம்படுத்த வேண்டும்.

மனதில் இடம் கொடுத்த ரசிகர்கள்

நான் இன்னைக்கு தான் ஒரு புது பாட்டுக்கு இசையமைச்சிருக்கேன். அந்த பாட்ட நீங்க எல்லாம் கேட்டு ரசிக்கிறீங்க. தெரியாத பாட்ட கேட்டு கேட்டு பழகணும்ன்னு நீங்க எல்லாம் நினைக்கிறீங்க. குழந்தை அழுதா இந்தப் பாட்டு, துள்ளி துள்ளி குதிக்க இந்தப் பாட்டு இருக்குன்னு சொல்றீங்க. டாஸ்மாக் எல்லாம் போய் தண்ணி போட வேண்டாம். என்னோட பாட்டு இருக்குன்னு சொல்றீங்க. எல்லா ரசிகர்களும் அவர்களுடைய மனதில் இடம் கொடுத்துள்ளீர்கள்.

அதேபோல, நான் கற்ற இசை எல்லாம் உலகம் முழுவதும் நம்முடைய பெருமையை சொல்ல வேண்டும். எனவே, ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடக்கும் இந்த இசை நிகழ்ச்சியை கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும்" எனக் கூறினார்.