Ilaiayaraaja: ப்ரஷ்ஷா இருக்கு ஜி.. உற்சாகத்தில் திளைத்த இளையராஜா வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்..
Ilaiayaraaja: இசையமைப்பாளர் இளையராஜா தனது கச்சேரிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்த பின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மக்களை குஷியாக்கி உள்ளார்.

Ilaiayaraaja: தமிழ் சினிமாவை இத்தனை ஆண்டு காலம் ஆகியும் தன் இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இவரது இசையும் குரலும் நம்மை எந்த எல்லைக்கும் கூட்டிச் செல்லும். அது அழுகையாக இருந்தாலும் சரி, கோவமாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, காமமாக இருந்தாலும் சரி. அத்தனையும் தன் இசைக்குள் கட்டி வைத்து வித்தை காட்டி வருகிறார்.
சாதனைக்கு சொந்தக் காரர்
தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்தவர், சொந்தமாக இசைக் குறிப்புகள் எழுதத் தெரிந்தவர் என எத்தனை எத்தனை சாதனைகளை செய்திருக்கிறார். இவரின் இசை செய்யும் மந்திரத்தை அறிந்தவர்கள் இவரை மேஸ்ட்ரோ என்றும் இசைஞானி என்றும் இசை புத்தர் என்றும், இசை அரசர் என்றும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்ரனர்,
என்னதான் இவரைச் சுற்றி பல வதந்திகளும் பிரச்சனைகளும் வந்தாலும் இவரை நாளுக்கு நாள் கொண்டாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.