இசைஞானியால் தெறிக்கப் போகும் யூடியூப்.. சரவெடியாக வெடிக்க உள்ள பிஜிஎம்'ஸ்.. வைப் மோடில் இளையராஜா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இசைஞானியால் தெறிக்கப் போகும் யூடியூப்.. சரவெடியாக வெடிக்க உள்ள பிஜிஎம்'ஸ்.. வைப் மோடில் இளையராஜா

இசைஞானியால் தெறிக்கப் போகும் யூடியூப்.. சரவெடியாக வெடிக்க உள்ள பிஜிஎம்'ஸ்.. வைப் மோடில் இளையராஜா

Malavica Natarajan HT Tamil
Published Oct 27, 2024 11:44 AM IST

இசையமைப்பாளர் இளையராஜா தனது திரைப்படங்களில் பயன்படுத்திய பின்னணி இசைகளை பதிவேற்றம் செய்வதற்காக பிரத்தியேகமான யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இசைஞானியால் தெறிக்கப் போகும் யூடியூப்.. சரவெடியாக வெடிக்க உள்ள பிஜிஎம்'ஸ்.. வைப் மோடில் இளையராஜா
இசைஞானியால் தெறிக்கப் போகும் யூடியூப்.. சரவெடியாக வெடிக்க உள்ள பிஜிஎம்'ஸ்.. வைப் மோடில் இளையராஜா

1000 படங்களைக் கடந்த அபூர்வ இசையமைப்பாளர்

பின், மக்களோடு மக்களாக அவரின் இசை கலக்கத் தொடங்கி மக்கள் மனங்களில் மிகவும் நெருக்கமான இசையமைப்பாளராக மாறினார் இளையராஜா.

இவரது தனித்துவமான இசையால் பித்துப் பிடித்து திரிந்த பல மக்கள் இவரை இசையின் கடவுள், இசைஞானி என அழைத்து வருகின்றனர்.

அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் 1000 படங்களைக் கடந்து தற்போது வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த ஜமா படம் வரை இவரின் இசை இன்றளவும் தாக்கத்தை ஏற்படுத்தி தான் வருகின்றன.

இன்றளவும் குறையாத மவுசு

ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, இமான், விஜய் ஆண்டனி, அனிருத் போன்ற பல இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் அவர்களின் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவை இளையராஜா செய்த சாதனைகளை முறியடிக்குமா என்றால் சந்தேகம் தான்.

தற்போது அவர் தமிழ் சினிமாவில் அதிக படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், தற்போது வெளிவரும் பெரும்பாலான படங்களில் இவரது பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, உலக அளவில் கவனம் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ், வாழை, லப்பர் பந்து போன்ற படங்களில் அவரது பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்

இந்நிலையில் தான் இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பின்னணி இசைகளை பதிவேற்ற அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இளையராஜா பிஜிஎம்'ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த யூடியூப் சேனலில் இனி இளையராஜா தனது பின்னணி இசைகளை ஒவ்வொன்றாக பதிவேற்றுவார் என தெரிகிறது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளையராஜா, பின்னணி இசைக்கான எனது அதிகாரபூர்வ யூடியூப் சேனலை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது பாடல்கள் உங்களை ஆட்கொண்டதை போல, இந்த பின்னணி இசையும் உங்களின் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன். ஒவ்வொரு இசைக்குறிப்பும் ஒரு கதையை சொல்லும் இந்த இசைப் பயணத்தை ஒன்றாக தொடங்குவோம் எனக் குறிப்பிட்டு அவரது ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.

இளையராஜா பயோபிக்

இளையராஜா சில மாதங்களுக்கு சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்துள்ளதாக கூறி ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியா சினிமா இசையின் அடையாளமாக பார்க்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படம் சமீபத்தில் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் நடிகர் தனுஷ், இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தை ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான துவக்க விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

பின், அவரது பிறந்தநாளன்று நடிகர் தனுஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

தற்போது குபேரா, இட்லி கடை படங்களில் பிஸியாக இருக்கும் தனுஷ் அந்தப் படங்களை முடித்தப் பின் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.