Music Director Harris Jayaraj: 10 விஜய் படத்துக்கு மியூசிக் போட மாட்டேன்னு சொல்லிருக்கேன்- ஹாரிஸ் ஜெயராஜ்
Music Director Harris Jayaraj: நான் 10 விஜய் படத்துக்கு மியூசிக் போட மாட்டேன்னு சொல்லி 11வது படமா ஓகே பண்ணுனது தான் நண்பன் படம் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.

Music Director Harris Jayaraj: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மின்னலே. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். முதல் படத்திலேயே ஆல்பம் ஹிட் கொடுக்கத் தொடங்கியவர், தொடர்ந்து தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து வந்தார். இவர் தற்போது, எஸ் எஸ் மியூசிக்கில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க: மறக்க முடியாத மின்னலே தீம்.. ஹாரிஸ் ஜெயராஜ் செய்த மேஜிக்..
சம்பளம் எல்லாம் காலி ஆகிடும்
அந்த வீடியோவில், " நான் சம்பளம் வாங்கிய உடனே, அதை இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் வாங்க தான் செலவழிப்பேன். வீட்டிற்கு வருவதற்கு முன்னே எல்லா காசையும் பொருள் வாங்க கொடுத்து விடுவேன். இதற்காக பலமுறை வீட்டில் திட்டு எல்லாம் வாங்கி இருக்கிறேன் என்றார்.
பைத்தியகாரத் தனமா தெரியும்
மேலும் பேசிய அவர், இந்த ரூம்ல இருக்க சேர்ல கூட ஒரு ஸ்பெஷல் இருக்கும். நாம நல்லா வேலை செய்யனும்ன்னா நம்மள சுத்தி இருக்க பொருள் நம்மள நல்ல மூட்க்கு கொண்டு வரணும். இந்த ரூம்ல இருக்க சேர்ல இருந்து குப்பை தொட்டி வரைக்கும் எனக்கு தனியா ஒரு ஃபீல் கொடுக்கும். அது நம்ம மியூசிக்லயும் ஒரு எஃபெக்ட் கொடுக்கும். அதுனால இங்க இருக்க எந்த பொருளா இருந்தாலும் அது ஆடம்பரத்துக்காக இல்ல. இதெல்லாம் கேக்க்கும் போது பைத்தியகாரத்தனமா இருக்கும். ஆனா எனக்கு இது தோணிருக்கு.
மனசுல இருந்து வரணும்
ஒரு நல்ல பாடல் தரணும்ன்னா மனசுக்குள்ள இருந்து வரணும். அதுவே ஒரு ஹிட் பாட்டு தரணும்ன்னா அது புத்தில இருந்து வரணும். அப்போ அதெல்லாம் நமக்கே தெரியணும். அந்த பாட்டு மனசுக்குள்ள இருந்து வருதா, புத்தியில இருந்து வருதான்னு. இது எல்லா மியூசிக் டைரக்டர்ஸ்க்கும் தெரியும்.
மேலும் படிக்க: புயலால் கோடிக்கணக்கான பொருட்களை இழந்த ஹாரிஸ் ஜெயராஜ்
ஆனா முடிஞ்ச அளவுக்கு புத்தியில இருந்து இல்லாம மனசுல இருந்து கொடுத்தோம்ன்னா அந்தப் பாட்டு பல வருஷத்துக்கு நிலைச்சு நிக்கும். நான் என்ன சொல்றேன்னா பாட்டு, 10 வருஷத்துக்கு இல்ல 100 வருஷத்துக்கு கூட நிலைச்சு நிக்கும்.
விஜய் படத்துக்கு மியூசிக் போடல
நான் ஒரு 10 படம் விஜய்யோட படத்துக்கு மியூசிக் போட மாட்டேன்னு சொன்னேன். 11 ஆவதா வந்த படம் தான் நண்பன். அத ஏன் பண்ணேன்னா என்னால அதிக வேலைய எடுத்துக்க முடியாது. நான் எடுக்க ஒவ்வொரு வேலையையும் ரொம்ப சீரியஸா எடுத்துப்பேன். என்னால இங்க ஒரு பாட்டு, அங்க ஒரு பாட்டுன்னு போக முடியாது. கீழ ஒருத்தர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு, மேல ஒருத்தர் வெயிட் பண்ணிட்டு இருக்காருன்னு சொல்லிட்டு இருந்தா அது எனக்கே தண்டனை கொடுத்துகிட்ட மாதிரி ஆகிடும்.
இதுதான் சக்சஸ்
எனக்கு நான் மியூசிக் பண்ற விதத்த ரசிக்கனும். சார் ரிலீஸ் டேட் வந்திடுச்சு சார்ன்னு நச்சரிக்க கூடாது. ஒரு அருமையான மின்னலே படத்துக்கு பாட்ட குடுத்துட்டு என்னடா இப்படி பண்ணிருக்காருன்னு சொல்லிட கூடாது. நாம செய்ற வேலைய ரொம்ப உறுதியா பண்ணனும். அதுல தப்பு சரின்னு எதுவும் இல்ல. தப்பையே சரியா செஞ்சா அதுதான் சக்சஸ்.
மேலும் படிக்க: ஹாரிஸ் ஜெயராஜின் டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட் இதோ..
ஏன்னா நாம எல்லாம் ஒரு கட்டத்துல நிறைய லாலாலா கேட்டுட்டோம். அப்புறம் நாநாநா கேட்டுட்டோம். வாவ்வோன்னு எல்லாம் கேட்டுட்டோம். இப்போ எல்லாம் அத கிரிஞ்ச்ன்னு சொல்லுவாங்க.
பிராண்ட உருவாக்கனும்
கடவுளே இன்னொருத்தவங்க இம்ப்ரஸ் பண்ண முயற்சிக்கலங்கும் போது, நாம முயற்சிக்க கூடாது. இங்க சக்சஸ் எதுன்னா நீங்க என்னவா இருக்கீங்களோ அத ஏத்துக்குறது தான். இன்னொருத்தருக்காக நீங்க உழைக்குறது சக்சஸ் கிடையாது. இன்னொருத்தருக்காக உழை்ச்சா நாம வேற ஒரு ஜெயிச்ச 10 பேர பாத்து நாம காப்பி பண்ணுவோம். அப்போ நம்மளோட பிராண்ட உருவாக்க முடியாது என்று கூறி தன் இத்தனை வருட கால பயணத்தை விளக்கி இருக்கிறார்.
