G.V. Prakash: “எனக்கு உத்வேகமே இவர்கள் தான்.. எல்லாம் அனுபவம் தந்தது..” மனம் திறக்கும் ஜிவி பிரகாஷ்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  G.v. Prakash: “எனக்கு உத்வேகமே இவர்கள் தான்.. எல்லாம் அனுபவம் தந்தது..” மனம் திறக்கும் ஜிவி பிரகாஷ்..

G.V. Prakash: “எனக்கு உத்வேகமே இவர்கள் தான்.. எல்லாம் அனுபவம் தந்தது..” மனம் திறக்கும் ஜிவி பிரகாஷ்..

Malavica Natarajan HT Tamil
Published Mar 11, 2025 07:07 PM IST

G.V. Prakash: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான். அவர்களின் பாடல்கள் தான் எனக்கு உத்வேகம் அளிக்கிறது என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

G.V. Prakash: “எனக்கு உத்வேகமே இவர்கள் தான்.. எல்லாம் அனுபவம் தந்தது..” மனம் திறக்கும் ஜிவி பிரகாஷ்..
G.V. Prakash: “எனக்கு உத்வேகமே இவர்கள் தான்.. எல்லாம் அனுபவம் தந்தது..” மனம் திறக்கும் ஜிவி பிரகாஷ்..

சாதனை மேல் சாதனை

17 வயதில் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக களம் இறங்கிய இவர், இன்று 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார், 25 படங்களில் நடித்துள்ளார் என தன் சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார். இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், தனது இசை தொழில், உத்வேகம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

உதவிய அனுபவம்

அமரன், தங்கலான், லக்கி பஸ்கார் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களின் ஆல்பங்கள் சமீபத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த வெற்றி அவருக்கு எந்த மாதிரியான உணர்வை கொடுக்கிறது எனப் பேசியுள்ளார். "இருபது ஆண்டுகளாக சினிமாத் துறையில் உள்ள அனுபவத்தால் நான் இதையெல்லாம் சமாளிக்க முடிகிறது. இந்தத் துறையில் 20 ஆண்டுகள் இருந்த பிறகு, பொறுப்பு, பதற்றம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றோடு, நல்ல ஆல்பங்களை வழங்க முடிகிறது. அந்த அனுபவம் நிச்சயமாக எனக்கு உதவியது" என்றார்.

வழிகாட்டும் இயக்குநர்கள்

படத்தின் கதைகள் பற்றி பேசிய ஜிவி பிரகாஷ், " நல்ல கதைகள் நல்ல இசையை உருவாக்க உத்வேகம் அளிக்கின்றன. அதனால், பா. ரஞ்சித், சுதா கொங்கரா, ராஜ்குமார் பெரியசாமி மற்றும் வெங்கி அட்லூரி போன்ற நல்ல இயக்குநர்களின் படங்களில் ஆல்பம் ஹிட் கொடுக்க முடிந்தது. அவர்கள் எனக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்த வகையான வேலையைச் செய்ய வழி காட்டினார்கள்" என்றார்.

அது எனக்கு இயல்பாக வரும்

ஒருபுறம் ஹே மின்னாலே போன்ற மென்மையான மெல்லிசைகளுக்கும், மறுபுறம் கோல்டன் ஸ்பாரோ போன்ற சுறுசுறுப்பான இளைஞர் பாடல்களுக்கும் இசையமைக்கிறேன். எனது வலிமை குத்துப் பாடல்கள் அல்ல. ஆனால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்காக கோல்டன் ஸ்பாரோ போன்ற பாடல்களை நான் இசையமைக்கிறேன். கதைக்கு வித்தியாசமான ஒன்று தேவைப்படும்போது, அதற்கு தகுந்த வழியில் நான் வேலை செய்கிறேன். அதுமட்டும் இல்லாமல் நான் ஒரு படத்தின் கதையை அடிப்படையாக நம்புகிறேன்" என்று கூறினார்.

உத்வேகம் கிடைக்கும்

கதையை அடிப்படையாகக் கொண்டு, மென்மையான மெல்லிசைகள் அல்லது வேறு வகையான பாடலை உருவாக்குகிறேன். இது கதையுடன் தொடர்புடையது. நான் இளையராஜா சார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசையைக் கேட்டு வளர்ந்தேன். அப்படித்தான் நான் இசையமைக்க உத்வேகம் பெற்றேன். எனக்கு ரொமான்டிக் மெல்லிசைகளுக்காக அதிகம் அறியப்படுவது சந்தோஷமா இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அது எனக்கு இயல்பாக வரும்.

முழுக்க முழுக்க தனுஷ் சாரோடது

கோல்டன் ஸ்பாரோ பாடல் முழுக்க முழுக்க இயக்குனரின் வழிமுறையை பின்பற்றி தான் இசையமைத்தேன். கோல்டன் ஸ்பாரோவுக்கு, தனுஷ் சார் வரிகள் மற்றும் அது எப்படிப் பேசப்படப் போகிறது அல்லது பாடிப் போகிறது; பாடலின் அணுகுமுறை எப்படி இருக்கப் போகிறது என்பதை எல்லாம் கூறி அவர் எனக்கு வழிகாட்டினார். அதன்படி, அந்த பாடலில் கொஞ்சம் ஃபங்கியாகவும் வித்தியாசமாகவும் நவீனத் தொடுதலுடனும் ஏதாவது செய்ய முயற்சித்தோம். அதனால் கோல்டன் ஸ்பாரோ பாடல் மக்களிடம் வேலை செய்தது என்றார்.