Idly Kadai Update: இட்லி கடையில் இருந்து வந்த ஸ்வீட்.. எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு..
Idly Kadai Update: தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

Idly Kadai Update: இட்லி கடையில் இருந்து வந்த ஸ்வீட்.. எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு..
Idly Kadai Update: நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கும் இட்லி கடை படத்தின் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். தனுஷின் 50வது படமான ராயனை இயக்கி நடித்த பின் அவர் அடுத்ததாக இந்தப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், குபேரா போன்ற படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
பொங்கல் வாழ்த்து
இந்நிலையில், தனுஷ் தான் இயக்கி வரும் இட்லி கடை படத்தின் சார்பாக அவரது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தனுஷிற்கும் நித்யா மேனனுக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இட்லி கடை படக்குழு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
