வீர தீர சூரன் படத்தோட பிஜிஎம், மியூசிக் எப்படி இருக்கும் தெரியுமா? அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வீர தீர சூரன் படத்தின் இசை எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு அப்டேட் வழங்கியுள்ளார்

வீர தீர சூரன் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில், '' சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது. 'தெய்வத்திருமகள்', 'தாண்டவம்', 'தங்கலான் ', 'வீரதீர சூரன்' இந்த நான்கு படங்களும் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்கள். இந்த நான்கு படங்களும் அவருக்கும், எனக்கும் சவாலானதாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றும்போது சவாலாக இருக்கும் என்பதால் சந்தோஷத்துடன் பணியாற்றுவேன்.
மேலும் படிக்க: வீர தீர சூரன் விக்ரமின் சிறந்த படம்.. தயாரிப்பாளர் பெருமை
திறமைசாலி இயக்குநர்
அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்திருக்கிறேன். மிகவும் திறமைசாலி. 'மார்க் ஆண்டனி' படத்தில் நானும், எஸ். ஜே. சூர்யாவும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து இந்த படத்திலும் இணைந்திருக்கிறோம். துஷாரா மற்றும் சுராஜ் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.
பிஜிஎம் எப்படி இருக்கும்?
இது ஒரு டார்க்கான பிலிம். இந்த படத்திற்காக 'அசுரன்' படத்தின் தொனியில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன். மிகவும் சவாலானதாக இருந்தது. ஒவ்வொரு மியூசிக்கல் ஸ்கோரும் மூன்று நிமிடம் நான்கு நிமிடம் என தொடர்ந்து இருக்கும். படம் பார்க்கும்போது இந்த பின்னணி இசை உங்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் 'வீரதீர சூரன்' படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி அடையும்'' என்றார்.
ஆங்கில தரத்தில் தமிழ் படம்
நடிகர் எஸ். ஜே. சூர்யா பேசுகையில், '' மிகவும் சந்தோஷம். இந்தப் படம் அருமையான படம். வித்தியாசமான படம். பொழுதுபோக்கு என்பது பல வகையில் இருக்கும். ஜாலியாக சிரிக்க வைப்பது ஒரு பொழுதுபோக்கு. அந்தப் படத்திற்கும் பெரும் வரவேற்பு இருக்கும். 'பிதாமகன்', 'சேது' போன்ற படங்களுக்கும் பெரும் வரவேற்பு இருக்கும். ஜீ. வி. பிரகாஷ் சொன்னது போல் 'அசுரன்' போன்ற படத்திற்கும் வரவேற்பு இருக்கும். இந்தப் படம் 'டிபிகல்'லான அருண்குமாருடைய படம். அருண்குமார் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ரசிகர். ஒரு ஆங்கில தரத்தில்.. தமிழ் மண்ணில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படம் . மிக அற்புதமான படம். இந்த படத்தில் நடிக்கும் போது மிகவும் ரசித்தேன். இந்தப் படத்தில் நீங்கள் புது எஸ் ஜே சூர்யாவை பார்ப்பீர்கள்.
நான் எப்போதும் நாயகன்
நான் எப்போதும் என்னை இயக்குநர்களிடம் ஒப்படைத்து விடுவேன் . அவர்களுக்கு என்ன தேவையோ ..! அதை நான் அப்படியே கொடுத்து விடுவேன். 'இறைவி'யில் ஆரம்பித்த அந்தப் பயணம்.. இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்கிறது. குணச்சித்திர நடிகர் என்பது ஒரு ரூட் . நான் எப்போதும் வில்லன். ஹீரோ. கதையின் நாயகன் ...எதிர் நாயகன் ... ஆனால் நாயகன்.
இயக்குநருக்கு தேவையானதை தந்தோம்
வீர தீர சூரன் படம் தரமான சம்பவமாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் அனைவரும் இயக்குநருக்கு என்ன வேண்டுமோ..! அதனை மையப்படுத்தி உழைத்திருக்கிறோம். ரியா ஷிபு - ஷிபு தமீன்ஸ் - துஷாரா விஜயன் - பிருத்விராஜ் - சுராஜ் வெஞ்சரமூடு - ஜீ வி பிரகாஷ் குமார் - மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இது படத்திற்கான முதல் விருது
சீயான் விக்ரமுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. அவர் தமிழ் சினிமாவின் கௌரவம். மிகச் சிறந்த நட்சத்திர நடிகர். இந்தப் படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார். வீரதீர சூரன் வெற்றிவாகை சூடும். இப்படத்தில் நான் பின்னணி பேசிய விதத்தை தொலைபேசி மூலம் அழைத்து ஒரு மணி நேரம் விக்ரம் சார் என்னை பாராட்டினார். இது இந்தப் படத்தில் நான் நடித்ததற்காக கிடைத்த முதல் விருது. இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.
