Pusha 3 Update: இது எல்லாம் ஆசிர்வாதம்.. புஷ்பா 3 அப்டேட் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்..
Pusha 3 Update: இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா 3 தி ரேம்பேஜ் படம் குறித்த அப்டேட் ஒன்றை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Pusha 3 Update: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2: தி ரூல் படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
புஷ்பா 2 ரீலோடட்
டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ஒரு மாதத்திற்குப் பிறகும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜனவரி 17ம் தேதி முதல் இந்தப் படத்தில் 20 நிமிட கூடுதல் காட்சிகளும் இணைத்து வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த அப்டேட்
புஷ்பா தி ரைஸ், புஷ்பா தி ரூல் என இரண்டு புஷ்பா படங்களின் இசையமைப்பாளராக பணியாற்றிய தேவி ஸ்ரீ பிரசாத், மூன்றாம் பாகம் குறித்த தகவல்களை இந்தியா டுடேக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
டிஎஸ்பி கூறியது என்ன?
அந்தப் பேட்டியில், டிஎஸ்பி மூன்றாம் பாகம் குறித்து கூறியதாவது: “புஷ்பா 2வின் வெற்றியைத் தொடர்ந்து, சுகுமார் சார் மிகுந்த ஆர்வத்துடன் அயராது உழைத்து வருகிறார். ஒவ்வொரு காட்சிகளையும் கதையையும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து மறு ஆய்ரு செய்து வருகிறார்.
புஷ்பா 3 இன் கதைக்கு ஏற்றவாறு நிறைய விஷயங்கள் இறுதியில் வடிவமைக்கப்படும். ஆனால் ஆம், எங்களிடம் சில யோசனைகள் உள்ளன. அவை நாங்கள் எங்கள் வேலையில் முன்னேறி செய்யும் போது முழு வடிவம் பெறும்.”
புஷ்பா 2 வெற்றி
இரண்டாம் பாகத்தின் வெற்றி குறித்துப் பேசிய அவர், "உண்மையைச் சொன்னால், புஷ்பா 1 இன் வெற்றிக்குப் பிறகு, புஷ்பா 2 மிகப்பெரியதாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் விண்ணைத் தாண்டி இருந்தன, மேலும் புஷ்பா படம் பல சவால்களுக்கு மத்தியில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இது ஆசிர்வாதம்
தெலுங்கு, இந்தி, கன்னடம் அல்லது வேறு எந்த மொழியாக இருந்தாலும், இந்தியா முழுவதிலுமிருந்து நாங்கள் பெற்ற அன்பு மாயாஜாலமானது. மகாராஷ்டிரா, காஷ்மீர், நேபாளம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். இது ஒரு ஆசீர்வாதம். இவற்றிற்கு நாங்கள் திரும்ப சொல்லக்கூடியது நன்றி மட்டுமே."
பாகுபலியை முறியடித்த புஷ்பா
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி 2 வசூலை முறியடித்துள்ளது. உலகளவில் ₹1,831 கோடிக்கும் மேல் மற்றும் இந்தியாவில் ₹1,438 கோடிக்கும் மேல் வசூலித்து, அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்த இந்தப் படம் இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
புஷ்பா 3 ஹிண்ட்
படத்தின் புரொமோஷன் போது, படத்தின் கதையில் சொல்ல வேண்டியது இன்னும் நிறைய இருப்பதாக படத்தின் இயக்குநர் சுகுமார் கூறினார். புஷ்பா ராஜ் எங்கே? என்ற தலைப்பில் வெளியான ஒரு வீடியோவில், புஷ்பா கதாபாத்திரம் இறந்துவிட்டதாக நம்பப்பட்டாலும், தலைமறைவாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. படக்குழுவினர் அதை தெளிவுபடுத்தாமல் புஷ்பா 3: தி ரேம்பேஜுக்கு ஹிண்ட் கொடுத்துள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்