Music Director Deva: ‘ நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ..’ மாஸ் காட்டிய டயலாக்.. பாம்புதான் இன்ஸ்பிரேஷன் - தேவா பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Music Director Deva: ‘ நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ..’ மாஸ் காட்டிய டயலாக்.. பாம்புதான் இன்ஸ்பிரேஷன் - தேவா பேட்டி

Music Director Deva: ‘ நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ..’ மாஸ் காட்டிய டயலாக்.. பாம்புதான் இன்ஸ்பிரேஷன் - தேவா பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
Feb 05, 2025 06:00 AM IST

Music Director Deva: ‘படத்தைப் பார்த்து முடித்த பின்னர் ரஜினி சார் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் சார்… நேற்று நாம் படம் பார்த்தோம். படத்தில் எனக்கு நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. படத்தில் ப்ளாஷ்பேக் இருக்கிறது.’ - தேவா பேட்டி!

Music Director Deva: ‘ நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ..’ மாஸ் காட்டிய டயலாக்.. பாம்புதான் இன்ஸ்பிரேஷன் - தேவா பேட்டி
Music Director Deva: ‘ நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ..’ மாஸ் காட்டிய டயலாக்.. பாம்புதான் இன்ஸ்பிரேஷன் - தேவா பேட்டி

ரஜினிகாந்திற்கு வந்த பெருங்குழப்பம்

இது குறித்து அவர் பேசும் போது, ‘ரஜினிகாந்தும் நானும் ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் இணைந்தோம். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

வெறித்தனமாக இசையமைத்தேன்.

இந்த நிலையில், மீண்டும் நாங்கள் ‘பாட்ஷா’ திரைப்படத்தில் இணைந்தோம். ‘அண்ணாமலை’ போல ‘பாட்ஷா’ படத்திற்கும் மிகவும் வெறித்தனமாக இசையமைத்தேன். அந்தப் படத்தின் பொழுது பின்னணி இசை அமைப்பதற்கு முன்பாக எல்லோரும் படத்தை பார்த்தோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

படத்தைப் பார்த்து முடித்த பின்னர் ரஜினி சார் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் சார்… நேற்று நாம் படம் பார்த்தோம். படத்தில் எனக்கு நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. படத்தில் பிளாஷ்பேக் இருக்கிறது. பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ் பேக் இருக்கிறது. இப்படி இருக்கும் படம், ‘அண்ணாமலை’ திரைப்படம் போல ஓடுமா என்று கேட்டார்.

100 அண்ணாமலைக்கு சமம்

உடனே நான் சார் இது 100 அண்ணாமலைக்கு சமம் என்று கூறினேன். ‘பாட்ஷா’ திரைப்படத்தில் என்னுடைய பின்னணி இசை பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள் ஆனால், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். பாட்ஷா படம் அப்படி இருந்தது. அதனால்தான் அப்படியான இசை வந்தது.

எதுவுமே அதற்கு செட்டாகவில்லை.

இன்றைக்கும் ‘பாட்ஷா’ திரைப்படம் டிவியில் போட்டால் ரோடு எல்லாம் காலியாக இருக்கிறது. அந்தப் திரைப்படமே முழுக்க முழுக்க ஒரு எனர்ஜிடிக்கான திரைப்படம். குறிப்பாக ‘நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை மாதிரி’ என்று ரஜினி பேசும் டயலாக்கை மெருகேற்றுவதற்காக நாங்கள் நிறைய விஷயங்களை செய்து பார்த்தோம்.

தேவா
தேவா (poketplayfilms , cityproductionmy)

ஏதோ சம்பந்தம் இருக்கிறது

ஆனால் எதுவுமே அதற்கு செட்டாகவில்லை. இந்த நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, ரஜினி சாரின் படங்களில் பாம்பு இடம்பெற்ற திரைப்படங்கள் எல்லாமே மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கிறது என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், உடனே பாம்பிற்கும் ரஜினிகாந்த் சாருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று நினைத்தேன். அதனை தொடர்ந்து, அந்த வசனத்திற்கு பின்னால் பாம்பு படம் எடுத்து சீறினால் என்ன ஒலியை எழுப்புமோ, அந்த ஒலியை வைத்தோம்.’ என்று அதில் (கலாட்டா யூடியூப் சேனலுக்கு) அவர் பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.