Music director Deva: ‘ ரெக்க கட்டி பறக்குதடி..10 நிமிடத்தில் கம்போசிங்க முடிச்சேன்; 3 மணிக்கு பாட்டு ரெடி!' -தேவா பேட்டி
Music director Deva: அடுத்த நாள் காலை 7 மணிக்கு நான், வைரமுத்து மற்றும் சுரேஷ்கிருஷ்ணா ஆகியோர் ரெடியாக ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆர்க்கெஸ்ட்ரா வருவதற்கு காத்திருந்தோம். என்ன பாடல், என்ன வகையான ஜானர் உள்ளிட்ட எதுவும் தெரியாது. - இசையமைப்பாளர் தேவா பேட்டி!

‘அண்ணாமலை’ திரைப்படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவா கலாட்டா யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தயக்கம் உண்டு
அதில் அவர் பேசும் போது, ‘என்னை ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அமர்த்துவதற்கு ரஜினிகாந்த் சாருக்கு நிச்சயமாக தயக்கம் இருந்திருக்கும். காரணம் என்னவென்றால், ஒரு இசையமைப்பாளர் தொடர்ச்சியாக நிறைய திரைப்படங்கள் செய்து கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது, திடீரென்று ஒரு புது இசையமைப்பாளருக்கு ஒரு பெரிய படத்தை கொடுக்கும் பொழுது, அந்த தயக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.
ரசிகர்கள் என்னை மிரட்டினார்கள்
அந்த சமயத்தில் நிறைய சம்பவங்கள் நடந்தன. ரஜினிகாந்தினுடைய ரசிகர்களே என்னை மிரட்டவும் செய்தார்கள். காரணம், அவர்களுக்கு ரஜினிகாந்த் பட பாடல்கள் நன்றாக வர வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆன பின்னர் அதே ரசிகர்கள் என்னை தலைமீது தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.