D.Imman: 'ஹிட் கொடுக்குறதவிட நியாயமான வேலை, நிம்மதியான தூக்கம் தான் முக்கியம்'.. டி.இமான் சொல்லும் ஹிட் சீக்ரெட்
D.Imman: படத்துக்கு ஆல்பம் ஹிட் தரணும்ன்னு யோசிச்சு எந்த மியூசிக்கும் பண்றது இல்ல. இயக்குநர் சொல்ற சீனுக்கு நியாயமான இசை கொடுத்தா தான் நிம்மதியான தூக்கம் வரும் என இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ளார்.

D.Imman: தமிழ் சினிமாவில் விஜய் தொடங்கி ரஜினி வரை பல உச்ச நடிகர்களுக்கு இசை அமைத்து பல ஆல்பம் ஹிட் கொடுத்தவர் தான் டி. இமான். இவர் தற்போது இயக்குநர் சுசீந்திரனின் 2கே லவ் ஸ்டோரி படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலர் தினத்தன்று ரிலீஸாகும் இந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ள நிலையில், டி.இமான் குமுதம் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சுசீந்திரன் சார் படம் சேலஞ்ச் தான்
அந்தப் பேட்டியில், " 2கே லவ் ஸ்டோரி படம் நான் சுசீந்திரன் சாரோட நான் சேர்ந்து ஒர்க் பண்ற 9வது படம். அவரு ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதைய வச்சு படம் பண்றதுனால எனக்கு ஒவ்வொரு படமும் நமக்கும் சேலஞ்சா இருக்கும்.
படத்தோட பேரு தான் 2கே லவ் ஸ்டோரி. ஆனா படத்துல அதிகம் பேசுனது பிரண்ட்ஷிப் பத்தி தான். அதுனால நல்லா பீட் அதிகமா இருக்க மாதிரியான பாட்டும் இருக்கு. எனகேகே பிடித்த மெல்லிசை பாடல்களும் படத்துல இருக்கு.
இது ஒரு நல்ல படம். கலர் ஃபுல்லா இருக்கு. சுசீந்திரன் சாரும், இந்த மாதிரி ஒரு கதைக் களத்துல இதுக்கு முன்ன படம் பண்ணல. இது சுசீ சார் படம் மாதிரியே இல்ல. புதுசா சினிமா எடுக்க வர்றவங்க படம் மாதிரி இருந்தது.
ஆல்பம் ஹிட்டுக்காக வேலை செய்யல
இப்போ இருக்க சூழல்ல ஆல்பம் ஹிட் கொடுக்குறது எல்லாம் ரொம்ப கஷ்டம். நான் ஆல்பம் ஹிட் கொடுக்கனும்ன்னு நெனச்சு எல்லாம் படம் பண்ணல. இயக்குநர் சொல்ற சூழலுக்கு ரொம்ப நியாயமான இசை தரணும்ன்னு நெனச்சு போட்ட பாட்டு தான் எல்லாம். நாள் முழுக்க வேலை செய்யுறோம். அதை முடிச்சிட்டு இரவு தூங்கும் போது அது நிம்மதியா இருக்கணும். அதுக்கு ஏத்த மாதிரி தான் நம்ம வேலையும் இருக்கணும். மத்தபடி ஆல்பம் ஹிட்டுக்காக வேலை செய்யல.
வெளிய இருந்து பாக்குறவங்களுக்கு தான் சின்ன படம், பெரிய படம் எல்லாம். ஆனா, நான் என் ஸ்டூடியோவுல இந்த படத்துக்காக பிரத்யேகமா ஒர்க் பண்ணனும்ன்னு எல்லாம் எதுவும் இல்ல. இந்த தொழிலுக்கு ஆசப்பட்டு வந்திருக்கோம். அதை நிறைவா செய்யணும்ன்னு நெனச்சேன். மனிதர்களையே பெரியவங்க, சின்னவங்கன்னு நான் பிரிச்சு பாக்க மாட்டேன். மனிதர்களையே பாக்காதபோது, வேலையில எப்படி பாப்பேன்.
முதல் படம் பண்ணும் போது 19 வயசு
தமிழன் படம் பண்ணும் போது விஜய் படம், பெரிய ஸ்டார் படம்ன்னு பயமா எல்லாம் இல்ல. ஏன்னா அதுக்கு முன்னாடி 5000 எபிசோடுக்கு ரீ ரெக்கார்டிங் பண்ணிருக்கேன். 70 பாட்டுக்கு மேல ஒர்க் பண்ணிருக்கேன். அதுனால தமிழன் படம் பண்ணும் போது எனக்கு முதல் படம் மாதிரியே தெரியல. அந்தப் படம் வெளிய வந்தபோது எனக்கு 19 வயது. எனக்கு பயம் இல்லன்னாலும் என் மேல மத்தவங்களுக்கு பயம் இருந்தது. ஒரு சின்ன பையனா இருக்கான். படம் எல்லாம் சரியா வருமான்னு யோசிச்சிட்டே இருந்தாங்க.
அவங்க ரீ-ரெக்கார்டிங் அப்போ சின்னதா வாசிச்சு காட்ட சொன்னாங்க. அது அவங்களுக்கு பிடிக்கலன்னா வேற மியூசிக் டைரக்டர் பேற சொல்லி அவங்கள மியூசிக் பண்ண சொல்றோம்னே சொன்னாங்க. அது எனக்கு சரியா தான் பட்டது. நான் என்ன தான் சொன்னாலும் அது சின்னத்திரையில இருந்து வந்த ஒருத்தன் பேசுறதா தான் இருக்கும். அதை எல்லாம் நம்மளால இல்லன்னு சொல்ல முடியாது.
விஜய் சார பாட வச்சோம்
அப்புறம் நான் ஃபர்ஸ்ட் ரீல் மட்டும் மியூசிக் போட்டு காமிச்சேன். அத டைரக்டர், ஆக்டர்ன்னு எல்லாரும் கேட்டு கை கொடுத்துட்டு போனாங்க. அதுக்கு அப்புறம் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் எல்லாம் வந்தாங்க.
விஜய் சார் வச்சு பாட்டு ரெக்கார்டு பண்ணும் போது யாருக்கும் தெரியாம ஸ்டூடியோவுக்கு காலையில 6 மணிக்கே வரவச்சோம். பிரியங்கா சோப்ராவ எல்லாம் அப்போ யாருக்குமே தெரியாது. அவங்கள தி.நகர் கடைத்தெருவுக்கு கூட கூட்டிட்டு போகலாம்ங்குற அளவுல தான் இருந்தாங்க.
ஸ்கூல் ரைம்ஸ் மாதிரி பாட்டு
இவங்க பாடுன பாட்ட ஸ்கூல் ரைம்ஸ் பாடுற மாதிரி தான் ரெடி பண்ணோம். இந்த பாட்டோட விஷுவல்ஸ் கூட அப்படி தான் இருக்கும். அனிமேஷன் கேரக்டர்ஸ் எல்லாம் இருக்கும் அந்த பாட்டுல. அதுனால அந்த பாட்டுல காம்ளிகேஷன்லஸே இல்ல.
அப்படியே கட் பண்ணா, ஜில்லா படத்துல கண்டாங்கி சேலை பாட்டு. அந்த பாட்டு இதுவரைக்கும் இல்லாத மாதிரி ஹை பிட்ச்ல இருக்கும். செட் ஆனா பாத்துக்கலாம். இல்லன்னா வேற வாய்ஸ் எடுக்கலாம்ன்னு தான் நெனச்சோம். ஆனா அவரோட வாய்ஸ் நல்லாவே செட் ஆச்சு" என தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்