Music Director D.Imman: பிறந்த நாளில் பாடம் புகட்டிய டி.இமான்.. வாய் அடைத்துப் போன ரசிகர்கள்!
Music Director D.Imman: இசையமைப்பாளர் டி.இமான் தனது பிறந்த நாளன்று தன் முழு உடல் உறுப்புகளையும் தானம் செய்துள்ளார்.

Music Director D.Imman: பிறந்த நாளில் பாடம் புகட்டிய டி.இமான்.. வாய் அடைத்துப் போன ரசிகர்கள்!
Music Director D.Imman: நடிகர் விஜய்யின் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றார். கிராமத்து கதைகளுக்கு இவர் தரும் முக்கியத்தும் மக்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கியது.
இவர், இசைத் துறையிலும் பல்வேறு திறமையான கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பலருக்கும் வாழ்க்கை அளித்துள்ளார். அத்துடன் இவர் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
உடல் உறுப்பு தானம்
இந்நிலையில், டி. இமான் நேற்று அவரது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அவர் தன் உடலை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்துள்ளார். இதனை அவர் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.