A.R.Rahman: 'ஏ.ஆர். ரஹ்மானுக்கு இதெல்லாம் தெரியாது.. அது ஒன்றும் பெரிய குறை இல்லை'- பாடகர் சோனு நிகாம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  A.r.rahman: 'ஏ.ஆர். ரஹ்மானுக்கு இதெல்லாம் தெரியாது.. அது ஒன்றும் பெரிய குறை இல்லை'- பாடகர் சோனு நிகாம்

A.R.Rahman: 'ஏ.ஆர். ரஹ்மானுக்கு இதெல்லாம் தெரியாது.. அது ஒன்றும் பெரிய குறை இல்லை'- பாடகர் சோனு நிகாம்

Malavica Natarajan HT Tamil
Jan 11, 2025 12:11 PM IST

A.R.Rahman: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றவர்களை பற்றி கிசுகிசு பேசவோ, நெகட்டிவ்வான கருத்துகளை பரப்பவோ தெரியாது என பாடகர் சோனு நிகாம் தெரிவித்துள்ளார்.

A.R.Rahman: 'ஏ.ஆர். ரஹ்மானுக்கு இதெல்லாம் தெரியாது.. அது ஒன்றும் பெரிய குறை இல்லை'- பாடகர் சோனு நிகாம்
A.R.Rahman: 'ஏ.ஆர். ரஹ்மானுக்கு இதெல்லாம் தெரியாது.. அது ஒன்றும் பெரிய குறை இல்லை'- பாடகர் சோனு நிகாம்

அந்தப் பேட்டியில், ஏ.ஆர். ரஹ்மான் அனைவரிடத்திலும் நட்பு பாரட்டக் கூடியவராக இல்லை என்றும் அவர் தனது இசையில் மட்டுமே கவனம் செலுத்தும் நபராக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இசை நாயகன் ரஹ்மான்

உலக மக்களை தனது இசையால் கொண்டாட வைத்த இசை நாயகன் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தமிழ் சினிமாவில் அரம்பித்த தனது இசைப் பயணத்தை மற்ற மொழிகளிலும் விஸ்தரித்து பின் ஹாலிவுட் வரை சென்று தன் திறமையை நிரூபித்தார்.

இவர் தன் பின்னால் எத்தனை புகழ் வெளிச்சம் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூலாக நகர்ந்துவிடுவார். அவர் வெற்றியை பெரிதாக கொண்டாடியதும் இல்லை. தோல்வியில் மனம் உடைந்ததும் இல்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான்- சோனு நிகாம்

இந்நிலையில், பாலிவுட் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் ஏராளாமான பாடல்களை பாடி தன் குரலால் மக்களுக்கு நெருக்கமானவராக மாறிய சோனு நிகாம் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசியுள்ளார். O2 இந்தியா எனும் பத்திரிகையில் அவர் அளித்த பேட்டி தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

அந்தப் பேட்டியில், “ஏ. ஆர்.ரஹ்மானுக்கு நெருங்கிய உறவுகள் என யாரும் இல்லை. அவர் யாருடனும் எளிதில் நெருக்கமாக பழகக் கூடியவரும் அல்ல. அவரை நான் அப்படிப் பார்த்ததே இல்லை. ஒருவேளை, அவர் ஏ.ஆர்.ரஹ்மானாக மக்களிடம் அறிமுகமானதற்கு முன்பு திலீப் ஆக இருந்த சமயத்தில் அவரை அறிந்த பழைய நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசி இருக்கலாம் என்றார்.

வேலையில் மட்டும் கவனம்

நான் அவரை யாருடனும் நெருக்கமாகப் பழகுவதையோ, மு்ககியத்துவம் கொடுத்து பேசுவதாயோ நான் பார்க்காததால் அப்படி சொல்கிறேன். அவர் மற்றவர்களிடம் நட்பு பாராட்டுபவர் அல்ல. அவர் தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவர்.

ரஹ்மானுடன் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்,

கிசுகிசு பேசத் தெரியாது

அந்த சுற்றுப் பயணத்தின் போது அவர் வெறும் மரியாதை நிமித்தமாக மட்டுமே என்னிடம் பேசிக் கொண்டு வந்தார். சில வார்த்தைகளை மட்டுமே பரிமாறிக் கொண்டார். அதே நேரத்தில், ரஹ்மான் ஒரு தொழிலுக்கு மரியாதை கொடுக்கும் நபர், அவருக்கு மற்றவர்களைப் பற்றி நெகட்டிவ்வாக பேசக் கூட தெரியாது. அவருக்கு கிசுகிசு பேசவும் தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் வேலை மட்டும் தான்,

எந்த அவசியமும் இல்லை

அவர் அப்படி இருப்பது ஒன்றும் அவரது குறை இல்லை. அவர் அப்படித்தான். என்னைப் பற்றியோ அல்லது வேறு யாரைப் பற்றியோ அவருக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, மற்றவர்கள் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புவதில்லை.

விலகி இருக்கிறார்

அவர் ஒரு தனித்துவமான ஆளுமை. அவர் தனது வேலையையும், பிரார்த்தனைகளிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அவர் யாரிடமும் மோசமாக நடந்து கொள்ள மாட்டார். அவர் யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டார். அவர் யாரைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார். இதையெல்லாம் விட்டு விலகியே இருக்கிறார். அவர் தனது குடும்பத்திடம் மட்டுமே நெருக்கமாக இருப்பார், அவர் யாரையும் தன்னிடம் நெருங்க விடுவதில்லை. அதுதான் சரியானது.” என்றும் கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மானுடன் சோனுவின் படைப்புகள்

சினிமா உலகில், சோனு நிகாம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் பல மெல்லிசைப் பாடல்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அவர்களின் முதல் கூட்டுப்படைப்பு தௌட் (1997) எனும் படத்தில் இடம்பெற்ற 'ஏ நஸ்னீன் சூனோ நா' பாடல், சோனுவின் குரலையும் ரஹ்மானின் புதுமையான இசையும் கலந்து உருவாக்கப்பட்டது. பின்னர் தில் சே (1998) படத்தில் இடம்பெற்ற 'சத்ரங்கி ரே', சாத்தியா (2002) படத்தின் முகப்புப் பாடல் மற்றும் லகான் (2001) படத்தின் பாடல்கள் என பல பிரபலமான பாடல்களை அவர்கள் உருவாக்கினர். ரங்கீலா (1995) படத்தில் இடம்பெற்ற 'தன்ஹா தன்ஹா' எனும் பாடல் இன்றளவும் பேசப்படும் ஒன்று.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.