தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Music Director Ar Rahman Tweeted That The Use Of Voice By Ai In Lal Salaam Has Been Given Due Credit

Lal Salaam: ’லால்சலாம் பட AI குரல் சர்ச்சை!’ உண்மையை போட்டு உடைத்த ரகுமான்!

Kathiravan V HT Tamil
Jan 30, 2024 01:54 PM IST

”Lal Salaam: தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் அது அச்சுறுத்தலும் தொல்லையும் அல்ல என தெரிவித்துள்ளார்”

ஏ.ஆர்.ரகுமான் - லால்சலாம்
ஏ.ஆர்.ரகுமான் - லால்சலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் வரும் பிப்.9 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை யூடியூபில் 99 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் கேட்டுள்ளனர்.

இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு அவர்களது குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தியதற்காக அவர்களின் குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்று தகுந்த தொகை வழங்கப்பட்டதா என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான், “அவர்களின் குரல் வழிமுறைகளை பயன்படுத்தியதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று தகுந்த ஊதியத்தை அனுப்பினோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் அது அச்சுறுத்தலும் தொல்லையும் அல்ல என தெரிவித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.