A.R.Rahman: 'எல்லாமே என்ன விட்டு போயிடுச்சு.. அப்போதான் வாழ்க்கை புரிஞ்சது..' ஏ.ஆர்.ஆர். ஷேரிங்க்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  A.r.rahman: 'எல்லாமே என்ன விட்டு போயிடுச்சு.. அப்போதான் வாழ்க்கை புரிஞ்சது..' ஏ.ஆர்.ஆர். ஷேரிங்க்ஸ்

A.R.Rahman: 'எல்லாமே என்ன விட்டு போயிடுச்சு.. அப்போதான் வாழ்க்கை புரிஞ்சது..' ஏ.ஆர்.ஆர். ஷேரிங்க்ஸ்

Malavica Natarajan HT Tamil
Jan 08, 2025 01:16 PM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிடித்தவை எல்லாம் தன்னை விட்டு போன பின்பு தான் வாழ்க்கை புரிந்ததாக கூறியுள்ளார்.

A.R.Rahman: 'எல்லாமே என்ன விட்டு போயிடுச்சு.. அப்போதான் வாழ்க்கை புரிஞ்சது..' ஏ.ஆர்.ஆர். ஷேரிங்க்ஸ்
A.R.Rahman: 'எல்லாமே என்ன விட்டு போயிடுச்சு.. அப்போதான் வாழ்க்கை புரிஞ்சது..' ஏ.ஆர்.ஆர். ஷேரிங்க்ஸ்

வயசே ஆகாதா?

இந்தப் பேட்டியை தொகுத்து வழங்கிய கோபி, ஏ.ஆர்.ரஹ்மான் சமீப காலங்களில் மிக இளைமையாக தெரிவதாகவும், மிகவும் ஸ்மார்ட்டாக மாறிவிட்டதாகவும் கூறினார். அத்துடன் நான் சிறுவயதில் இருந்தே உங்கள் இசையை கேட்டு வளர்ந்தேன். நீங்கள் வயசே ஆகாதது போல் எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான், "இசைக்கு வயசு கிடையாது. நமக்கு வயசானதால இசைக்கும் வயசாகாது. அந்தந்த காலத்துக்கும் ஏற்ற மாதிரி நாம நம்மை மாத்திக்கனும்.

அன்பின் வழி

வாழ்க்கையில் நாம தொடர்ச்சியா பல ஏற்ற இறக்கங்கள பாக்குறோம். அதுவும் சினிமாவுல இருக்கோம். நான் ஆஸ்கார் மேடையில அன்பின் வழியை தேர்ந்தெடுக்கனுமா இல்ல வெறுப்பின் வழியை தேர்ந்தெடுக்கனுமான்னு என்னை கேட்டா நான் அன்பின் வழியைத் தான் சொல்லுவேன். அந்த வார்த்தையை இப்போ வரைக்கும் கடைபிடிச்சிட்டு வரேன். இதை எல்லாம் நாம முதல்லயே முடிவு பண்ணிடனும். நம்ம வாழ்க்கையில என்ன நடந்தாலும் இதே மாதிரி தான் இருக்னும்ன்னு முடிவு பண்ணி வச்சிரனும்.

முடிஞ்ச வரை நல்லவங்களா இருப்போம்

நாம எல்லா இடத்துலயும் சரியா இருக்க முடியாது. இப்போ நான் அவசரமா பிளைட்ட பிடிக்க போயிட்டு இருக்கேன். அப்போ என்கிட்ட 10 பேர் சுத்தி நின்னு போட்டோ கேட்ட என்ன பண்ண முடியும். அந்த சமயத்துல நாம எத பண்ண முடியும்ன்னு யோசிக்கனும். அந்த சமயத்துல நாம முடிஞ்ச அளவுக்கு நல்லவனா இருக்கனும்.

எனக்கு பிடிச்ச எல்லாமே என்னவிட்டு போயிடுச்சு

என்னோட சின்ன வயசுலயே என் அப்பா இறந்துட்டார். அதுக்கு அப்புறம் என் பாட்டி இறந்துட்டாங்க. நான் ஒரு மயில் வச்சிருந்தேன் அதுவும் இறந்துடுச்சி.

அதுக்கு அப்புறம் நான் ஒரு நாய் குட்டி வச்சிருந்தேன். அதுவும் இறந்துடுச்சி. அதெல்லாம் என்ன விட்டு போன உடனே நெனச்சேன். வாழ்க்கையில எதுவும் நிரந்தரம் இல்லைன்னு. நாம எந்த நோக்கத்துல போறோமோ அது அன்பாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் அதை எப்படி தக்க வைக்க போறோம்ன்னு தெரிஞ்சது.

கடவுள் கொடுத்த பாடம்

எது நமக்கு ரொம்ப பிடிச்சாலும் அது நம்மள விட்டு போயிடுது. அது கடவுள் எனக்கு கொடுத்த பயிற்சின்னு நான் நெனக்குறேன். அதுனால இதை எல்லாம் சமாளிக்க கத்துக்கணும்.

சின்ன வயசுல எனக்கு ஒரு இசைக் கருவி மேல அவ்ளோ ஆசை. எனக்கு எப்போ கெடைக்கும் எப்போ கிடைக்கும்ன்னு பாத்துட்டே இருந்த்ன். அது எனக்கு கிடைக்கல. அதுக்கு அப்புறம் அத நெனக்குறதே விட்டுட்டேன் என் கிட்ட வந்துடுச்சு.

அப்போ, எல்லா விஷயத்துல இருந்தும் கொஞ்சம் தள்ளி இருந்தா நமக்கு தேவையானது எல்லாம் கிடைக்கும்ன்னு நான் நெனச்சேன். இது தான் வாழ்க்கைன்னும் எனக்கு புரிஞ்சது" என்றார்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.