'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்

'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்

Malavica Natarajan HT Tamil
Published Apr 20, 2025 06:38 AM IST

ஏஐ தொழில்நுட்பத்தை தவறான முறையில் அதிகமாகப் பயன்படுத்துவது விஷத்தை ஆக்ஸிஜனுடன் கலந்து சுவாசிப்பது போன்றது என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்
'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்

ஏஐ பயன்பாடு

இந்த நிலையில், இசை உருவாக்கத்தில் ஏஐ பயன்பாடு குறித்து அவர் என்ன நினைக்கிறார்? என்பது குறித்து பிடிஐயிடம் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், இதன் பயன்பாடு ‘கட்டுப்பாட்டுடன்’ இருக்க வேண்டும், இல்லையெனில் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ரஹ்மான் கூறினார். (இசையில் ஏஐ பயன்பாடு குறித்த ரஹ்மானின் விளக்கம்)

மிகவும் அருவருப்பான பாடல்கள்

அந்தப் பேட்டியில், ரஹ்மான், “என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. சில பாடல்கள் மிகவும் அருவருப்பாக இருக்கின்றன, ஆனால் அவை பிரபல பாடகர்களின் குரல்களில் வெளிவருகின்றன. இது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், இல்லையெனில் குழப்பம் ஏற்படும்” என்று கூறினார்.

விஷத்தை சுவாசிப்பது போன்றது

மேலும் அவர், “நல்ல மற்றும் கெட்ட அம்சங்கள் இரண்டும் உள்ளன, நல்ல விஷயங்கள் தங்கள் கனவை நனவாக்க வாய்ப்பு இல்லாதவர்களை அதிகாரப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதை தவறான முறையில் அதிகமாகப் பயன்படுத்துவது நமக்கு தீங்கு விளைவிக்கும். இது விஷத்தை ஆக்ஸிஜனுடன் கலந்து சுவாசிப்பது போன்றது. சில விஷயங்களைச் செய்ய முடியாது என்பது போல விதிகள் இருக்க வேண்டும். சமூகத்தில் அவர்கள் எப்படி நெறிமுறைகள் அல்லது நடத்தையைப் பற்றிப் பேசுகிறார்களோ, இதுவும் மென்பொருள் மற்றும் டிஜிட்டல் உலகில் நடத்தை” என்று கூறினார்.

அனுமதி பெற்றே பயன்படுத்தினேன்

லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் இறந்துபோன இரண்டு பாடகர்களின் குரல்களை மீண்டும் உருவாக்க ஏஐ பயன்படுத்தியது குறித்து முன்னதாக அவர் விளக்கம் அளித்திருந்தார். அந்தப் பாடகர்களின் குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று, அவர்களுக்குக் கூலி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தக் லைஃப்

மணி ரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் படத்திலிருந்து ஜிங்குச்சா எனும் பாடல் வெளியானது. இதனை நடிக்ர் கமல் ஹாசன் எழுதியிருந்தார். கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜி ஜார்ஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.