விவாகரத்து அறிவிப்புக்குப் பின் முதல் பிறந்தநாள்.. எப்படி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விவாகரத்து அறிவிப்புக்குப் பின் முதல் பிறந்தநாள்.. எப்படி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?

விவாகரத்து அறிவிப்புக்குப் பின் முதல் பிறந்தநாள்.. எப்படி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?

Malavica Natarajan HT Tamil
Jan 06, 2025 09:50 AM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது விவாகரத்து அறிவிப்பிற்கு பின் தன் முதல் பிறந்தநாளை இன்று கொண்டாட இருக்கிறார்.

விவாகரத்து அறிவிப்புக்குப் பின் முதல் பிறந்தநாள்.. எப்படி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?
விவாகரத்து அறிவிப்புக்குப் பின் முதல் பிறந்தநாள்.. எப்படி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்?

எதைக் கொண்டும் இணைக்க முடியாது

மேலும், இந்த முடிவை அவர், அவர்களது உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்னையால் ஏற்பட்ட அழுத்தத்திற்கு பிறகு எடுத்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகளுக்கு இடையே நிலவிய பதற்றமும், சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒன்று சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அதை இனி எதனைக்கொண்டும் இணைக்க முடியாது. சாய்ரா பானு, இந்த முடிவை வலி மற்றும் வேதனையின் வழியாகவே எடுத்திருக்கிறார். ஆகையால், இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு தனிப்பட்ட பிரைவசியை அளிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

விவாகரத்தை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்

அதை தனது எக்ஸ் தள பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வலியோடு உறுதிப்படுத்தி இருந்தார். அதில், "நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.

நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும்போது, எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அழைத்து நண்பர்களுக்கும் நன்றி" என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

29 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த தம்பதி

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு திருமணம் மறைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மா கரீமா பேகத்தின் ஏற்பாட்டின்கீழ் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்தத்தம்பதிக்கு கதீஜா மற்றும் ரஹீமா என்ற 2 மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் திரை இசைப் பயணத்திலும் வளர்ச்சியிலும் முக்கியப்பங்கு வகித்தவர், சாய்ரா என பல மேடைகளில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்திக்கு விளக்கமளித்த மகன்

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு விவகாரத்தை அறிவித்தவுடன், சில மணிநேரத்தில் தற்செயலாக ஏ.ஆர்.ரஹ்மான் குழுவில் பாடும் பாடகி மோகினி டே என்பவரும் கணவரை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் பிரிவுக்கு மோகினி டே தான் காரணம் என யூட்யூபில் சகட்டுமேனிக்குப் பலர் பேச ஆரம்பித்துவிட்டனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பவேண்டாம். தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்குமாறு தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் கேட்டுக்கொண்டார்.

எச்சரித்த ஏ.ஆர்.ரஹ்மான்

அதன் அடுத்தகட்ட நகர்வாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களைக் கொண்ட சமூக ஊடகப் பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும்’ என ஏ.ஆர். ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார். அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டப்பூர்வமாக வழக்கு தொடரப்படும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸில் எச்சரித்துள்ளார்.

சினிமாவை விட்டு விலகல்

தன் மனைவி தன்னை விட்டு பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த சினிமா தான். அதில் கவனம் செலுத்தியதால் தான் மனைவி தன்னை விட்டு பிரிந்துவிட்டார் என உணர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவை விட்டு விலகுவதாக பலரும் சமூக வலைதளங்களில் ஆதரமற்ற கருத்துகளை பரப்பி வந்தனர்.

இதைக் கண்ட அவரது மகள் கதீஜா. இந்த மாதிரியான பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள் என பதிவிட்ட நபரையே டேக் செய்து பதிலடி தந்தார். இதன் பின் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

அத்துடன், இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஏர்.ஆர். ரஹ்மான் தன் துல்லலான இசையாலும், நடனத்தாலும் மக்களை காதலிக்க நேரமில்லை படத்தின் எனை இழுக்குதடி பாடலுக்கு இசையமைத்து இழுத்தார். இந்த பாடல் 2024ம் ஆண்டு இறுதி கட்டத்தில் அனைவராலும் வைப் செய்யப்பட்ட ஒன்றாகவே மாறிப்போனது.

ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள்

நிலைமை இப்படி இருக்க இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இது அவரது விவாகரத்து அறிவிப்புக்குப் பின் வரும் முதல் பிறந்தநாள்.

முன்னதாக, அவரது பிறந்த நாளுக்கு தர்கா சென்ற சமயத்தில் தான் அவரது மனைவி சாய்ரா பானுவை சந்தித்ததாக செய்திகள் வெளியானது.

அப்படி இருக்கையில், இன்று அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

காலையிலேயே வழிபாடு

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாலையிலேயே தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார். அதனை உறுதி செய்யும் பொருட்டு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவும் செய்துள்ளார்.

அந்தப் பதிவில் தர்காவின் புகைப்படத்தை பகிர்ந்து குட் மார்னிங் என பதிவிட்டு எமோஜிக்களையும் இணைத்துள்ளார். இந்தப் பதிவை பார்த்த பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.