G.V.Prakash: டைவர்ஸ்க்கு அப்புறம் நடிகையோட டேட்டிங்கா? உண்மையை உடைத்த ஜி.வி பிரகாஷ்!
G.V.Prakash: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், மனைவி சைந்தவியுடனான விவாகரத்துக்குப் பின் நடிகையுடன் டேட்டிங் செய்வதாக வெளியாகும் கருத்துகளுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

G.V.Prakash: தமிழ் சினிமாவில் தான் இசையமைத்த முதல் படத்திலேயே அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்து, இன்று தன் 100வது படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் இசையமைப்பதுடன், தற்போது சினிமாவில் கதாநாயாகனாகவும் முத்திரை பதித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான நாச்சியார், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர் போன்ற படங்களில் தன் தனித்துவமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்.
கிங்ஸ்டன் படம்
இவர் தற்போது, கிங்ஸ்டன் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் பேனரின் கீழ் ஜி.வி. பிரகாஷ் குமாரே தயாரித்துள்ளார். கமஷ் பிரகாஷ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் பேச்சுலர் படத்திற்கு பின் ஜி.வி. பிரகாஷுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் திவ்ய பாரதி. மேலும் இந்த படத்தில் இளங்கோ குமரவேல், சேதன், ஆண்டணி போன்றோரும் நடித்துள்ளனர்.
ஜி.வி. 25வது படம்
கடல் சார்ந்த கதைக்களத்துடன் இந்தப் படம் அமைந்துள்ளது. இது ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகும் 25வது படம் என்பது கூடுதல் தகவல்.
