A.R.Rahman: நான் கடன்பட்டவன்.. ஆனா.. இதெல்லாம் பண்ண மாட்டேன்- உறுதியாக நிற்கும் ஏ.ஆர். ரஹ்மான்
A.R.Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் போதைப் பழங்களை ஊக்குவிக்கும் பாடல்களையும், கெட்ட வார்த்தைகள் உள்ள வரிகளையும் எப்போதும் பயன்படுத்த மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

A.R.Rahman: தமிழ் மட்டுமல்லாது உலக அளவில் தனது இசையின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர் ஏ.ஆர். ரஹ்மான். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகில் பல சாதனைகளையும், இசையில் சோதனை முயற்சிகளையும் செய்து வருகிறார். இவர், ஜனவரி 17 அன்று நடைபெற்ற சூஃபி இசை நிகழ்ச்சியில் தனது மறைந்த குரு பத்ம விபூஷண் உஸ்தாத் குலாம் முஸ்தபா கானுக்கு அஞ்சலி செலுத்தினார்.
குருவிற்கு அஞ்சலி
மும்பை NR டேலண்ட் & ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஏற்பாடு செய்த ஹாஸ்ரி என்ற சூஃபி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஹ்மான், “நான் எப்போதும் இந்துஸ்தானி பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ள விரும்பினேன், கான் சாப் என்னை உடனடியாக தனது குடும்பத்தில் ஒருவராக ஆக்கினார்.
அவர் எப்போதும் மிகவும் ஊக்கமளிப்பவராக இருந்தார். அவர் போன்ற சிறந்த மேஸ்ட்ரோக்கள் ஹரிஹரன், சோனு நிகாம் மற்றும் ஷான் போன்ற பிரபலமான திரை இசைக் கலைஞர்களை உருவாக்கினர். கான் சாப்பினால் தான் நான் எனது லோ ரேஞ்ச் இசையை பயன்படுத்த கற்றுக்கொண்டேன். நான் லோ ரேஞ்ச் இசைகளை பயன்படுத்துவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை,